அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்.
உண்மையான திறமையின் வெற்றியை, அது கேலிகளை, போலித்தனங்களை ஒரே அடியில் வீழ்த்துவதைக் கண்டு கண்ணீர் சுரக்கும் ஒரு அனுபவத்துக்கு நான் உள்ளான ஒரு காணொளியை இங்கு பகிர்கிறேன்.
http://www.youtube.com/watch?v=RxPZh4AnWyk
மேலதிக தகவலுக்கு, http://en.wikipedia.org/wiki/I_Dreamed_a_Dream#Susan_Boyle_version
உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்கி…
என்றென்றும் அன்புடன்,
மூர்த்திஜி
பெங்களூரு
அன்புள்ள மூர்த்தி
உண்மைதான். ஆனால் நம்மைச்சுற்றி ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சிதான் இது. அதில் ஒன்று அழகாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
ரயில்பயணங்களில் நான்கில் ஒரு சந்தர்ப்பத்தில் நான் மன உறுதி, நேர்மை ஆகியவற்றின் வெற்றியைக் குறிக்கும் ஒரு கதையை சொல்லக்கேட்பதுண்டு
ஜெ