நாகர்கோயில் மழை:கடிதங்கள்

நாகர்கோயிலின் மழைக்காலம் ஒரு அழகிய கனவு எனக்கு. சமீபத்தில் ராமன் தேடிய சீதை படத்தில் பார்த்து ஜொள்ளு விட்டேன். கல்லிடைக் குறிச்சியில் பணி புரிந்த காலத்தில் அடிக்கடி நாகர் கோவில் வருவேன் – VLC என்னும் ஒரு பெரும் குழுமத்தில் முந்திரி பதனம் செய்ய.

நெல்லை வந்திருந்த போது, நெல்லையப்பரையும் ஆச்சியையும் பார்க்கப் போயிருந்தேன்..  நின்ற சீர் நெடுமாறன் அரங்கம் பார்த்து நொந்து போனேன். வார்த்தையில் சுகாவின் கட்டுரை படித்து நின்ற சீர் நெடுமாறன் என்றதும் அவ்வரங்கத்துக்கு என் மனதில் ஒரு உருவம் கொடுத்திருந்தேன்.  எங்க ஊரில் ஒத்த டாப் எடுக்கறதுன்னு ஒரு வழக்கு உண்டு. அதாவது, வீட்டின் பின்புறச் சுவரில் இருந்து ஒரு புறமாய் ஒரு கூரை இறக்கி அதை ஒரு வாழ்விடமாகப் பயன்படுத்துவது – அதாவது, ஒரு வீடு கூடக் கட்டத் துப்பில்லாமல், இருக்கும் வீட்டில் மிகக் குறைந்த செலவில் ஒரு நிழலிடத்தை உருவாக்கிக் கொள்வது. மொத்த இந்தியக் கலாச்சாரமே தன் தொன்மையை மறந்து, பழமையிலிருந்து ஒத்த டாப் எடுத்துக்குதோ என்றொரு சந்தேகம் எனக்கு. அதற்குத் தலைமையகம் போல் நெல்லை.

 

2 நாள் முன்பு, நண்பர் ஒருவரிடம் நாஞ்சிலின் தொலைபேசி எண் இருந்தது – தொலை பேசி, தமிழக மிதமான குடியர்கள் சங்கம் சார்பாக கண்ணதாசன் விருதுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன். உங்கள் கட்டுரைகள் மூலமாக நானறிந்த நாஞ்சிலின் மிக நெருங்கிய நண்பன் என்று அறிமுகம் செய்துகொண்டேன்

 

அன்புடன்

 

பாலா

 

 


நின்ற சீரழிந்த நெடுமாறன் அரங்கம்?

தனுவச்சபுரம்

பேருந்து அந்த இடத்தை கடக்கையில்
எப்போதும் ஒருவர்
அனேகமாக ஒரு முதியவர் சொல்வார்
தனுவைத்தபுரம் என்று
ராமன் தன் தனுவை வைத்த இடமாம்

ராமன் ஏன் தனுவை வைத்தான்
நாண் அறுந்து போய்விட்டதா?
அம்புத்தீர்ந்து போய்விட்டதா
வில் ஒடிந்து போய்விட்டதா?

சரி, இந்த ஊரென்ன
இன்று எல்லா ஊருமே
தனு வைத்த புரங்கள்தான்

சுந்தர ராமசாமி கவிதை. நினைவில் இருந்து.

*

நாஞ்சில் குடி நிறுத்தி விட்டார். உடனே கோபம் அதிகமாகிவிட்டது. பார்திருப்பீர்களே வாராவாரம் ஆனன்ந்த விகடனில்? குடிதான் கோபம் மீது நீரூற்றிவந்தது போல

ஜெ

ஜெ,


அடடா நாஞ்சில் குடியை நிறுத்திவிட்டாரா?? சே.. நான் ஒவ்வொரு முறை குடிக்கும் போது அவருக்கு மானசீகமாக சியர்ஸ் சொல்லி வந்தேனே.. கவிமணியின் உதவியாளர் இசக்கியின் மகன்கிட்ட சொல்லி ஒரு “எந்த நாள் சொல்வேன் இனி” இரங்கற்பா வாங்கணுமே..

 

ஒரு கட்டிடம் கட்டி முடித்துப் பின் வயதாகிப் பாழாவது சரியே..

 

ஆனால் கட்டும் போதே பாழாகக் கட்டுவதுதான் பார்க்கும்போதே குமட்டுகிறது.

 

கோவை மருத மலைச் சாலையில் உள்ள எங்கள் வேளாண் கல்லூரி ஒரு மிக அழகிய படைப்பு. 3 வருஷம் முன்னாடி மத்திய அரசாங்கம் 100 கோடி க்ராண்ட் கொடுத்தது. அப்பணத்தை எல்லாரும் சாப்பிட்டது போக, அவர்கள் கட்டியது, பழைய மதில் சுவரை உடைத்து, காங்ரீட்டில் ஒரு வாசல். இளிக்கிறது.. நாம் கேட்பதெல்லாம், தலைவர்களாக இருப்பவர்களிடம் ஒரு குறைந்த பட்ச vision.  எப்போதோ ராஜிவ் காந்தி சொன்னது நினைவுக்கு வருகிறது. Our leaders are so short sighted that they can’t see beyond their noses.
 

அன்புடன்

 

பாலா

 

 
 

 

 

அன்புள்ள பாலா

முந்தைய கட்டுரைகோபுலு கடிதங்கள்
அடுத்த கட்டுரைபின் தூறல்:கடிதங்கள்