அறிமுகம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு!
என்னை தமிழிலில் எழுத ஊக்கம் அளித்தமைக்கு நன்றி. பொதுவாக நான் முன்பு படித்த இலக்கியத்தில் அந்த எழுத்தாளர் என்னிடம் சொல்வது போலவே இருக்கும். ஆனால் பல முறை உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது நானே சிந்தித்தது போலவும், எழுதியது போலவும் இருக்கிறது! எனக்கு இலக்கியம் படிக்க மட்டும் தெரியும். அதை பற்றிய விவாதங்களுக்கு செல்லும் alavukku நான் நிறைய படித்தவன் அல்ல. கி. ரா. ராஜநாரயனின்  கதைகள் எனக்கு பிடித்தமானவை. அப்புறம் பிரபஞ்சன். அவ்வளவுதான். நான் அயல் நாட்டில் தனிமையில் ஆய்வுகள் செய்துகொண்டிருக்கும்போது  அந்த சிவாஜி MGR சர்ச்சையின் மூலம் உங்கள் எழுத்துக்களை படிக்க ஆரம்பிதேன்,  எனக்கு நகைச்சுவை கிண்டல் மிகவும் பிடிக்கும் என்பதனால்.  நீங்கள் விகடனில் சங்க இலக்கியத்தை பற்றி ஒரு தொடர் எழுதும்போது தர்மபுரி மாவட்டத்தின் புளிய மரங்களை பற்றியும் டீ கடைகளை பற்றியும் எழுதி இருந்தீர்கள். நம் ஊரை பற்றி முதன் முதலில் எழுதிய எழுத்தாளர் என்ற நினைவு நன்றாக இருக்கிறது. இப்பொழுது அந்த மரங்கள் எதுவும் இல்லை. வெட்டி விட்டார்கள். நாயக்கன் கோட்டையும்  மாறிவிட்டது. அந்த சிலைகள் அதே நிலையில் உள்ளன. உங்கள் நகைச்சுவை எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. இன்று கூட கடன் படித்துவிட்டு நன்றாக சிரித்தேன்.
வணக்கம்!
Dhandapani
அன்புள்ள நண்பருக்கு

தொடர்ந்து எழுதுங்கள். ஒரு மண் அங்கே வாழும் மக்களின் சொற்கள் வழியாக மொழியாக ஆகியபடியே இருக்க வேண்டும். அதன் மூலமே மண் நிரந்தரமாகிறது. மண் ஒரு பொருள் மட்டுமல்லாமல் ஆகிறது.

தருமபுரி எழுதப்படாத நிலம் என்பது உண்மை. ஆனால் நான் அங்கே 4 வருடம் வாழ்ந்தும் அந்த மண்ணில் என் மொழி படரவில்லை. என் மனம் என் சொந்த ஊரிலேயே இருந்தது. கேரளத்தில் காசர்கோடில் மிக அழகான நிலத்தில் 5 வருடம் இருந்தேன். அங்கும் மனம் பரவவில்லை

ஒரு மனத்துக்கு ஒரு நிலம்தான் போல
ஜெ

 

என் ஊர் தர்மபுரி  -திருப்பதூர் சாலையில் இருக்கும் மஞ்சமேடு. தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி அணை கட்டிய பிறகு நங்கள் இருக்கும் பகுதியில் தண்ணீர்   தட்டுப்பாடு  தீர்ந்திருக்கிறது. அதனால் மக்கள் தென்னை மற்றும் நெல் சார்ந்த வேளாண்மைக்கு  மாறினார்கள். எங்கள் பகுதியில் வறண்ட நிலம் இருப்பது குறைவுதான். இந்த மிகக்குறுகிய பரப்பளவுக்குள் சில தனியான பழக்க வழக்கங்கள் உள்ளன. எனக்கு எங்கள் ஊரில் இருக்கும் புளிய மரங்கள், தென்னை மரங்கள் மற்றும் நெல் முதலியவையே மனதில் எப்போதும் இருந்து வருகின்றன. நான் 16 வயதிலேயே  படிப்பதற்காக ஊரை விட்டு சென்று விட்டேன். வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு என்று இருந்தாலும் அந்த சிறுவயது தாக்கங்கள் எப்போதும் கனவு போல் கூட வருகின்றன. முதலில் நான் நகருக்கு வந்த பொது என் தமிழ் வார்த்தைகளை கிண்டல் செய்வார்கள். காட்டன் என்று கேலி pesa, நான் எல்லோரும் பேசும் பொது தமிழ் பேச வேண்டியதாயிற்று. அனால் நான் இப்போது அப்படி பேச கூச்சப்படுவிதில்லை. எனக்கு சில ஆளுமைகள் முழுமையாக கவர்ந்துவிடும். என் சில பள்ளி ஆசிரியர்கள், மரபியல் பேராசிரியர் போன்றவர்கள் என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அப்பொழுது நான் avarkalaka உணர்வேன். இப்பொழுதும் அதேதான் நிகழ்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் நான் உங்கள் எழுத்துக்களை படிக்கும் போது என்னை போலவே என்று எழுதி இருந்தேன். எனக்கும் என் ஊரில் இருக்கும் மக்களை பிடிப்பதில்லை. தர்மபுரி மண்ணைப்பற்றி ஔவையார் எழுதினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான் ஹொகேனக்கல் செல்லும் போதெல்லாம் கண்ணுக்கு தெரியும் மரங்களில் ஒற்றை நெல்லிக்காயை தேடியது ஒரு நகைச்சுவை. சிறு வயதில் நானகவே அதியமானின் காவலர்கள் நெல்லிக்காயை அந்த காடுகளில் இருந்துதான் பறித்திருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அதன் பிறகு நீங்கள் விகடனில் எழுதியது ஒரு குறிப்பு என்றாலும் அது தர்மபுரியின் கலாச்சாரம், வறுமை, ஆகியற்றை விளக்கியது. எனக்கு கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம் படிக்க ஆவலாக உள்ளது. உங்களுடைய வழிகாட்டல் இருந்தால் மிகவும் மகிழ்வேன். நான் இலக்கியம் படிக்க இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதை உங்களுக்கு நினைஊட்ட விரும்பிகிறேன். உங்களுடன் தொடர்ந்து எழுத அனுமதி அளித்தற்கு மிக்க நன்றிகள்.
நன்றி வணக்கம்!
தண்டபாணி
 அன்புள்ள தண்டபாணி,

ஏதோ ஒஉவகையில் மொழிக்குள் வருவதென்பது இலக்கியத்துள் நுழைவதே. வாசிப்பு -விவாதம்- எழுத்து எதுவானாலும். மேலான எழுத்து மிகச்சிரந்த எழுத்து என்பது ஓர் அபூர்வம். எப்போதாவது நிகழ்வது அது. ஆனால் எழுதுவது என்பது தன்னளவிலேயே உயர்ந்தது.

எழுதுங்கள்
ஜெ

 

வணக்கம் ஐயா.

            உங்கள் கடிதம் கண்டு மிக்க மகிழ்ச்சி. புகழ் பெற்ற எழுத்தாளரான நீங்கள் எனக்கு எழுதியதில் மட்டட்ற மகிழ்ச்சி. என் நண்பர்களிடம் கூறி ஆனந்தம் அடைந்தேன். எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை இது எனக்களிக்கின்றது.

            தனபாலன் என்பது என் புனைப்பெயர். என் பெயர் தினேசுவரி. எழுத்துத் துறையில் எனக்கு மிகுந்த ஆர்வம். தற்போதுதான் இலக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளேன்.

         கவிதையில் எனக்கு மிகுந்த ஆர்வம். சிறுகதை எழுதுவதிலும் ஆர்வம் பிறந்துள்ளது. உள்ளூர் எழுத்தாளர்கள் தவிர எழுத்தாளர் புதுமைப்பித்தன், பிரபஞ்சன், கு.அழகிரிசாமி, சுஜாதா, எஸ்,ராமகிருஸ்னன், அம்பை கதைகளை வாசிப்பேன் உங்கள் புத்தகங்களும் அதில் அடங்கும்.. மேலும் எம்மாதிரியான புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்பதனை எனக்கு வழிக்காட்ட முடியுமா…?

     தாமதமாக பதில் அனுப்பினும் தவறில்லை. ஆசானாக வழிக் காட்டுவீர்கள் என நம்புகிறேன்.   

 

 அன்புடன்

எம். தனபாலன் மலேசியா

 

அன்புள்ள தனபாலன்

நீங்கள் என் இணையதளத்தை அதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். விமரிசகனின் சிபாரிசு என்ற பேரில் விரிவான நூல் பட்டியல் உள்ளது

அத்துடன் நானெழுதிய ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ என்ற நூலையும் படிக்கலாம். அதில் கலைச்சொற்கள், கோட்பாடுகள், அடிப்படைகள் எல்ல்லாமே  உள்ளன. விரிவான நூற்பட்டியலும் உள்ளது

உயிர்மை வெளியீடு

ஜெ

 

 

 

என் இதயத்தாளில் பதிவாகியிருக்கும் இனிய எழுத்தாளர் அவர்களுக்கு,
 
பழம்பெருமை வாய்ந்த முன்சிறை திருமலை கோவிலின் வரலாறை தங்களுக்கே உரிய பாணியில் மிக அற்புதமாக விளக்கியது என்னை பரவசத்தில் ஆழ்த்தியது.
 
இலக்கிய சித்தர்கள் இணைந்து சென்றது பயணத்தை மேலும் மெருகூட்டியதை தங்களது கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
 
எனது இளமைப் பருவத்தில் முன்சிறை ஆலயம் சென்றபோது ஆலயத்தின் முன்பு ஒரு தென்னை மரம் கொடிக்கம்பம் வரை வளர்ந்து பின்பு அது வளர பிடிகாமல் இடை வளைந்து சுருக்கம் விழுந்து நின்ற காட்சியை பாக்யா வார இதழுக்கு துணுக்காக எழுதி அனிப்பியிருந்தேன். அதை புகைப்படம் எடுத்து அனுப்பும்படி கேட்க நானும் புகைப்படமெடுத்து அனுப்பி அது பாக்யா வார இதழில் வெளிவந்தது.
 
தங்களின் கட்டுரையை படித்த போது படித்துறையில் படிந்து கிடக்கும் பாசிகள் போல என் அடி மனதில் படிந்து கிடந்த நினைவுகள் எழும்பி வந்து என்னை பரவசத்தில் ஆழ்த்தியது.
 
இந்த ஆன்ந்த பரவசத்துக்கு காரணமான உங்களது கட்டுரைக்கும் உங்களுக்கும்
என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
நன்றி   நன்றி   நன்றி
 
ஐரேனிபுரம் பால்ராசய்யா
அன்புள்ள  பால்ராசய்உங்கள் கடிதம் மீண்டும் முஞ்சிறை பார்த்திப சேகர புரம் நினைவுகளை எழுப்பியது. சமிபத்தில் சில நண்பர்களுடன் மீண்டும் சென்றிருந்தேன். அழகான ஊர். மேலும் அங்கே என் அப்பாவின் ஒரு நினைவுத்துளியும் இருக்கிறது

ஜெ

ஜெயமோகன்,
என் நாகர்கோயில் படங்களைப் பார்க்கவும்
குமார்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு!
முந்தைய கட்டுரைகிளி சொன்ன கதை : 3
அடுத்த கட்டுரைகிளி சொன்ன கதை : 4