மு. இளங்கோவன்

இணையத்தில் ஆர்வத்துடன் பழந்தமிழ் இலக்கியத்தைப்பற்றி பேசிவருபவர்களில் முக்கியமானவர் மு. இளங்கோவன். ஏற்கனவே ஆதிச்சநல்லூர் குறித்த கட்டுரையில் அவரது வலைப்பதிவு பற்றி சுட்டி கொடுத்திருந்தேன். பொதுவாகவே நம் தமிழாசிரியர்களுக்கு தமிழறிவும் தமிழார்வமும் குறைவு. வட்டிக்கு பணம் விடுபவர்களே எண்ணிக்கையில் அதிகம். உண்மையான ஆர்வத்துடன் தமிழ்ப்பணியில் ஈடுபடும் சிலரும் அவர்களின் வட்டாரத்தில் ‘பொழைக்கத்தெரியாத’ வர்களாக ஏளனத்துடன் மட்டூமே பார்க்கப்படுவார்கள்.

மு.இளங்கோவன் தன் இயல்பான தமிழார்வத்தால் மிகுந்த தீவிரத்துடன் செயலாற்றி வருகிறார். குறிப்பாக கல்லூரி வட்டாரத்தில் தமிழ் இணைய உலகை அறிமுகம் செய்ய அவர் தொடர்ச்சியாக பயிலரங்குகள் நடத்தி வருகிறார். சென்ற சனி ஞாயிறுகளில் இணையப்பயிற்சி அளிப்பதற்காக இங்கே உள்ள சன் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வந்திருந்தார்.

ஞாயிறன்று காலை என்னைப்பார்க்க அவரும் ஆய்வாளர் செந்தீ நடராஜன் அவர்களும்  வந்திருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் வேதசகாயகுமார் வந்தார். பொதுவாக தமிழிலக்கியம்- ஆய்வு குறித்து பேசிக்கொண்டிருந்தோம். தமிழ்நாட்டிலும் இந்தியாவெங்கும்  உள்ள சமணம் குறித்துத்தான் அதிகமும் பேசினோம். சமணம் குறித்த தகவல்களை கணக்கில் கொண்டு பழந்தமிழ் இலக்கியங்களை வாசிப்பதைப்பற்றி விவாதித்தோம்

மு இளங்கோவனின் இணையப்பக்கம்

http://muelangovan.blogspot.com/

முந்தைய கட்டுரைஒலியும் இசையும்
அடுத்த கட்டுரைதேர்தல்முறை, ஒரு கடிதம்