கடல் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்த பாடல். ரஹ்மான் எம்.டி.விக்காக பாடியது. முதன்முறையாக இதைக்கேட்கையில் முழுமையாகவே இதன் நரம்பொலிகளில் ஈடுபட்டு குரலையே என்னால் கவனிக்கமுடியவில்லை. அதன்பின் குரலை. அப்போது காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன, அவற்றை கவனிக்கமுடியவில்லை. ரஹ்மானின் சாதனைப்பாடல்களில் ஒன்று என நான் இதைச் சொல்வேன். ஒரு சினிமாப்பாடலுக்காக எடுத்துக்கொண்டிருக்கும் உழைப்பும் நுணுக்கமாக சேர்த்துச் சேர்த்து திரட்டிய படைப்பூக்கமும் ஓர் அற்புதம்
ஆனால் இந்தப்பாடலை கடல் படத்தின் பாடல்களில் இரண்டாம் இடத்தில்தான் வைப்பேன். இன்னொன்று உள்ளது, ஒரு படி மேலாக
நெஞ்சுக்குள்ளே
http://mtv.in.com/videos/episodes/unplugged-season-2/unplugged-2-ar-rahman-nenjukulle-full-song-12602.html#currentshow