தமிழ் ஸ்டுடியோ

அன்புள்ள, மரியாதைக்குரிய.. திரு. ஜெயமோகன் அவர்களுக்கு.

நான் அருண். நானும் என் நண்பர் குணா இருவரும் சேர்ந்து தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் இணையத்தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். இந்த இணையத்தளம் பற்றி நீங்களும் உங்கள இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டு எங்களை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். தொடங்கி மூன்று மாதத்திலேயே உங்கள் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டு, எங்கள் பணியை பாராட்டி இருந்தீர்கள்.
புதிது புதிதாக சிந்தித்து ஒவ்வொரு மாற்றங்களாக செய்து வருகிறோம். அதன் ஒரு கட்டமாக தற்போது எங்கள் இலக்கியப் பிரிவில் இருந்து மடல் போட்டி ஒன்றை நடத்தி வருகிறோம். வெகுவாக குறைந்துப் போன மடல் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இதனை செயல்படுத்த விழைந்துள்ளோம்.

 இணைப்பு: http://thamizhstudio.com/ezhuthungal_madal.htm

நன்றி,

உங்கள் வாசகர்கள்,
அருண் மற்றும் குணா.

முந்தைய கட்டுரைநாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள்
அடுத்த கட்டுரைகவிதை ஒன்றுகூடல்,நிகழ்வு இரண்டு