தாகமும் தயக்கமும்

ஸ்டாலின் காலகட்டத்து ரஷ்யாவைப்பற்றிய சித்தரிப்புகளில் அங்கே இருந்த இரு விஷயங்கள் ஆர்வத்தையும் அச்சத்தையும் ஆர்வத்தையும் உருவாக்கும். ஒன்று, அங்கே நூல்களுக்கிருந்த மதிப்பு. வேறெங்கும் நூல்கள் அந்த அளவுக்கு ஆர்வமாக தேடி வாசிக்கப்பட்டதில்லை. ஏனென்றால் அவை கிடைப்பது கடினம், கணிசமானவை தடைசெய்யப்பட்டிருந்தன. அறிவுக்கான தாகம் நூல்களை வைரங்களுக்கு இணையானவையாக ஆக்கியது.

இரண்டு, ஐயங்கள் உருவாக்கப்படும் விதம். யாரும் யார்மேலும் ஐயத்தை உருவாக்கி அழித்துவிடமுடியும் என்ற நிலை. ஐயத்தை விதைத்தாலே போதும், அது எப்படியும் முளைத்துவிடும். ஒவ்வொருவரும் ரகசியக் கண்காணிப்புக்குள்ளாமும் சமூகத்தில் ஐயம் மிகப்பிரம்மாண்டமான பூதமாக மாறிவிடுகிறது. ஆனால் அதையும் மீறி அறிவுக்கான தாகம் மானுட மனதை எடுத்துச்செல்கிறது என்பதையும் அந்நூல்கள் காட்டின.

ஆச்சரியமாக கருணாகரன் காலச்சுவடில் எழுதிய இந்தக் கட்டுரை அதே சித்திரத்தை அளிக்கிறது. இது புலிகள் இருந்த ஈழச்சூழலைப்பற்றிய விவரணை. இதில் அடிக்கோடிடப்பட்ட வரி நம்மூரார் இதில் ஆற்றிய பங்கு. அவர்கள் அந்த போராட்டத்தில் தங்கள் அற்பத்தனத்தை மட்டுமே கொண்டு சென்று சேர்த்தனர். எந்த நத்யிலும் நாம் மலினங்களை மட்டுமே சென்று கொட்டுகிறோம்

முந்தைய கட்டுரைகாசி
அடுத்த கட்டுரைதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-1 (அறிவியல் சிறுகதை)