சுயநலம் பாராது பொதுநலத்திற்காக தமது வாழ்நாள் முழுவதையுமே தியாகம் செய்த நமது ” பசுமைப் பேராளியான ” இயற்கை வேளாண் ஞானி ” நம்மாழ்வார் ” அவர்களால் உருவாக்கப்பட்ட ” நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான வானகம் பண்ணை ” இயற்கை வழி வேளாண்மை சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை பல வருடங்களாக சிறப்பாக செய்தும் , அதை நம் மக்களுக்காக எவ்வித ஒளிவுமறைவும் இல்லாமல் கற்பித்துக் கொடுத்துக் கொண்டும் வருகிறது.
இந்த சீரிய பணியின் பலனாய் தற்போது தமிழகம் மட்டுமில்லாது உலகமெங்கும் இயற்கை வழி வேளாண்மை சிறப்பாக நடைபெற்று உணவு சங்கிலி மீட்கப்பட்டு வருகிறது.
இதை நம்முடைய எதிர்கால தலைமுறையினருக்கும் கொண்டு சென்று, அவர்களும் பலனடைய வேண்டும் என்கிற நோக்கில் கடந்த 6-10-2012 அன்று வானகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நம்மாழ்வார் ஐயா தலைமையில் நடைபெற்றது. அதில் ஆராய்ச்சிப் பணிகளை மேலும் விரிவுபடுத்தத் தேவையான ” மனிதவளம் பற்றியும், நிதி தேவைப்பற்றியும் பற்றிம், நீண்டநேரம் விவாதிக்கப்பட்டது. முடிவில் நம்மாழ்வார் ஐயா அவர்களும் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ” ஏங்கல்ஸ் ராஜா ” அவர்களும் பொதுநலன் விரும்பிகளுக்கும், நம்மாழ்வார் ஐயாவால் பலன் அடைந்தவர்களுக்கும், பசுமை காவலர்களுக்கும், இளைஞர்களுக்கும் கேட்டுக் கொண்டதுயாதெனில்
1. தொடர் மின்வெட்டினால் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் வானகமே வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலை நீடித்தால் பண்ணை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது.
இதற்குத் தீர்வாக புதுபிக்கக் கூடிய இயற்கை எரிசக்தியான ” சூரிய ஒளி மின்சார தகடுகள் 5HP அளவுகளில் குறைந்த விலையில் பொருத்தித்தர ஒரு நிறுவனம் முன்வந்துள்ளது. அதற்கு செலவாகும் உத்தேச மதிப்பு ரூபாய். 5 இலட்சம்.
இதற்கு தேவையான நிதியை (உதரணத்திற்கு, 1000 பொதுநலன் விரும்பிகள் ரூ.500/- வீதம் நன்கொடையாக கொடுத்தால் இத்திட்டத்தை நிறைவு செய்துவிட முடியும்). இதன் மூலம் இன்னும் அதிகப் படியான நீர் நமக்கு கிடைக்கப் பெற்று வனத்தையே உருவாக்க முடியும்.
” மழைக்காலம் முடியும் ( இரு மாதத்தற்குள் ) முன்னர் செய்துமுடிக்க வேண்டும். இல்லையெனில் கோடை வரும் முன்னரே பெரும் தோய்வு நிலை ஏற்பட்டு விடும்.”
2. வானகத்தில் பயிற்சி நடக்கும் இடம் ஒரு கீற்றுக்கொட்டகை என்பது அனைவருக்கும் தெரியும், தற்போது மழைக்காலம் என்பதால், அதிக மழைவந்தால் தாங்கக்கூடியதாக இக்கொட்டகை இல்லை. இதை மாற்றியமைக்கவும் , இங்கு நீண்டகால பயிற்சிக்கு வருபவர்களுக்கு முறையான இடவசதி தேவை.
3. மேலும் ” நம்மாழ்வார் ஐயாவின் ” அறிவுக் கூர்மைக்குக் காரணமான புத்தகங்கள் நமது வானகத்தில் உள்ளது. அதை அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ளுவும், அதை பாதுகாக்கவும் நூலக வசதி தேவை?
4. வானகத்தில் இயற்கையின் மீது பற்றுள்ள பயிற்றுனர்களும் தேவைப்படுகின்றனர்.
எனவே 1000 துடிப்பான சமூக சிந்தனையுள்ள தன்னார்வமிக்க இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இயற்கை வழி வேளாண்மை ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் வாழ்வியல் நெறிகளையும் கற்பித்து அவர்களையே பயிற்றுனர்களாக உருவாக்கும் பணியும் விரைவில் செய்தும் முடிக்க வேண்டும். ( 1000 தன்னார்வ இளைஞர்கள் தேவை. )
எனவே தங்களால் இயன்ற நிதியை மற்றும் பங்களிப்பை உடனடியாக அளித்து , வானகத்தின் வளர்ச்சியில் பங்கேற்று, இவ் ஆராய்ச்சிப் பணிகளை விரிவுபடுத்த தொடந்து பணியாற்ற உதவுவோம்.
செய்தியை நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நன்றி!!
வானகம் வங்கி கணக்கு விவரங்கள்:
நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :
( Vanagam IOB Account no )
G. Nammalvar A/C no :137101000011534
Bank Name : Indian Overseas Bank , Kadavoor
IFSC Code : IOBA0001371
Branch Name : Kadavoor
Branch Address : 22-a South Street Via Tharangampatti Kadavoor Pin : 621315
Contact : 04332 -279233
email: [email protected]
மேலும் விவரங்களுக்கு
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல், கரூர் மாவட்டம் – 621 311
தொலைபேசி எண்கள் : 94435 75431, 98444 45714, 94880 55546
Vanagam, Surumanpatti, Kadavur,
Tharagampatti Via,
Karur Dt.
Pin code 621311.
Cell : 94435 75431, 98444 45714, 94880 55546
http://vanagamvattam.blogspot.in/
http://www.vanagam.com/
http://www.facebook.com/pages/Nammalvar-Ecological-Foundation/
http://www.facebook.com/pages/Dr-G-Nammalvar-Organic-Agriculturist/