எம்.வி.வி நினைவு

நண்பர் ரவி சுப்ரமணியன் எம்.வி.வெங்கட்ராம் பற்றிய அவரது நினைவுகளை எழுதியிருப்பதை அழியாச்சுடர்களில் வாசித்தேன். ஆத்மார்த்தமான நினைவுகள் கொண்ட அழகான கட்டுரை அது. ரவியும் அவரது நண்பர்களும் அமைந்தது எம்.வி.வியை அவரது முதுமையின் சோர்விலிருந்து மீட்டது. நான் சந்தித்த மூன்றுமுறையும் அவர் ரவி, பொதியவெற்பன், பாவை சந்திரன் போன்றவர்களைப்பற்றிப் பேசியிருக்கிறார்

கட்டுரையில் காதுகள் நாவலைத் தேடி மீட்டெடுத்த கலியமூர்த்தி பற்றி ஒரு வரி வருகிறது. வெடிக்குரல் கொண்டவராகையால் எம்.வி.வியுடன் அணுக்கமாக, அவருடன் பேசக்கூடியவராக அவர்தான் இருந்தார். ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். அருண்மொழியின் சித்தப்பா. ரவி கூட அருண்மொழி வகையில் எனக்கு உறவுதான்

முந்தைய கட்டுரைஇடஒதுக்கீட்டின் சிற்பிகள்- கடிதம்
அடுத்த கட்டுரைபேக்கர் வீடு -ஒரு மறுதரப்பு