ராஜா-ஒருகடிதம்

அன்புள்ள ஜெ

உங்களது கருத்தை ஒப்புக் கொள்கிறேன். பல நுணுக்கமான இசையையும் மென்மையுமாக – மணித்துணிகளை நிரப்பி இருக்கிறார். பல விதமாக கௌரவிக்கப் படவேண்டியவரே.

எனக்குப் போதிய விமரிசனப் பயிற்சி இல்லை. பல விதமான இசைகளைக் கேட்டிருக்கிறேன். மேற்கத்திய செவ்விசைக்கு (Western Classical) அனுபவத்தை அந்நியப்படுத்துதல் ஏதுமின்றி இயல்பான தளம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தவர். கர்நாடக இசையிலும், அவரது முயற்சிகள் பல, மனதில் ஒரு பெரு மகிழ்ச்சியை உண்டாக்கும் .

அவரது இசைத் துணுக்குகள் ஏற்கனவே பார்த்துப் பழகிய நண்பர்கள் போல மனம் (முகம்?) பார்த்து சிரிக்கும்.

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் – மோகன் சுஹாசினி ஓடுகின்ற பாடல் – ‘பருவமே புதிய பாடல் ..’ நடுவே ஷூ சப்தத்தைத் தொடர்ந்து ஒரு அமைதி ஹார்மோனியத்தின் மெல்லிய துணுக்கு. தொடர்ந்து ஒரு அமைதி. பின் பியோனோ இசை – கேட்பதற்கு அற்புதம் – படமாக்குதலில் மற்றொரு உச்சம் – அந்த ஹார்மோனிய இசைக்கு, ஒரு சிறுமி சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வருவாள் – மிக அற்புதம் – காட்சி கவிதையாக ஜொலிக்கும்.

http://www.youtube.com/watch?v=WxCIUL4cDxw – 1:10 – 1:20 –

கதாநாயக நாயகி – முகம் கூட – தெரியாது – எனினும் சூழலும் ஓர் கதா பாத்திரமாக இசையுடன் இணைந்து பரிமளிக்கும்.

அன்புடன்
முரளி

முந்தைய கட்டுரைபேக்கர் வீடு -ஒரு மறுதரப்பு
அடுத்த கட்டுரைதம்பி [சிறுகதை]