காந்தி கோயில்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

காந்தி குறித்த கோவில்களைத் தேடிக் கொண்டிருந்தபோது, இந்தச் சுட்டியைப் பார்க்க நேர்ந்தது . தங்களைக் கோவிலுக்கு உள்ளே அனுமதிக்காத, ஜாதி இந்துக்களை எதிர்த்து, ஒரு தலித் எம் எல் ஏ கட்டிய கோவில். ஒரிசாவில் இருக்கிறது. 85 வயதாகியும், இன்னும் தவறாமல் கோவிலைப் பார்த்துக் கொள்கிறார். எவ்வளவுதான் தலித் அறிவுஜீவிகள்/அரசியல்வாதிகள் காந்தியைத் தூற்றினாலும், யாரும் இல்லாதபோது, காந்தியும் இந்து மரபும் அவர்களுக்குக் கை கொடுத்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது.

சுட்டிகள்

1) http://www.indianexpress.com/news/idol-of-gandhi-worshipped-in-orissa-temple/442651

2) http://scraps.oriyaonline.com/blog/tag/gandhi-temple-of-orissa/

நன்றி
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்
தளம்: https://sites.google.com/site/tnexplore/

முந்தைய கட்டுரைபனிமனிதன் – சுனில்கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைபொன்முடி