அன்புள்ள ஜெ அவர்களுக்கு வணக்கம்
அண்மையில் க.. நா. சு. வைப் பற்றி வலைப் பதிவு ஒன்றை வாசிக்கும் போது “யீஷீறீபீமீக்ஷீ” என்ற ஒரு சொல்லை வாசித்தேன் , தமிழ் வாசிப்புக்குப் புதியவனாக இருப்பதால் அது என்ன வென்று தெரிய வில்லை அர்த்தமும் புரியவில்லை , கொஞ்சம் தமிழ் தெரிந்தவர்களிடம் கேட்டாலும் அவர்களும் மண்டையை சொரிந்து கொஞ்சம் முழித்ததுதான் மிச்சம், அதனால் எனக்கும் ஒரு சந்தேகம் , உண்மைலையே “யீஷீறீபீமீக்ஷீ” என்ற ஒரு சொல் இருகிறதா ?
அன்புடன்
காளிதாசன்
அன்புள்ள காளிதாசன்,
கணிப்பொறி புழக்கத்திற்கு வந்த ஆரம்ப நாட்களில் ஸரித்ஹஅந் எழுத்துரு பழக்கமாக இருந்தது. நான் ¾Á¢Æ¢ø «ò¨Å¾õ எழுத்துருவைப் பயன்படுத்தி வந்தேன். அதன்பிறகுதான் யூனிகோடு என்னும் எழுத்துரு வந்து எல்லாம் ஒரே எழுத்துருவுக்குள் மாற்றப்பட்டன. இருந்தாலும் இன்றும்கூட பதிப்பாளர்கள் பழைய சூஹசுகூபீகுஹஹபி வகை எழுத்துருக்களையே பயன்படுத்துகிறார்கள். ஆங்கில அடைப்புக்குறிச் சொற்களை எழுத்துருமாறம் செய்யும்போது இப்படி ஆகிவிடுகிறது. இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்
ஜெ
அன்புள்ள ஜெ.,
தங்களின் “இலக்கியம் ஒரு கேடா?” பதிவைப் படித்து ரசித்தேன்.
இலக்கியத்தை இலக்கியத்தாலேயே களையும் அபாரமான உத்தியைக் கையாளக் கூறியிருக்கும் தங்களது பதிலைப் படித்து, அதன் அங்கதம் உச்சபட்சமாக மூளையில் உறைக்க, ஒரு வெடிச்சிரிப்புடன் வலதுபக்கம் பார்த்தால் அங்கு “நூல்களை வாங்க” தலைப்பின் கீழ் தங்கள் புகைப்படம் ஒரு நமுட்டுச் சிரிப்புடன் “எப்படி?” என்று கேட்பது போல் என்னைப் பார்க்கிறது. Enjoyed the coincidence. :)
அன்புடன்,
-பாலாஜி.
அன்புள்ள பாலாஜி
இலக்கியத்தை ஒழிக்க இன்னொருவகை இலக்கியத்தால் மட்டுமே முடியும். கடவுளை ஒழிக்க வேறு கடவுளைத்தானே உருவாக்குகிறார்கள்?
ஜெ
திரு ஜெமோ,
இன்று காலையிலிருந்து மனசு தண்ணிக்குள்ள இருக்குற மாதிரி “கம்”நு இருந்துச்சு.
அதுக்காக மேனேஜர் வீட்டுல இருந்துக்கோன்னு சொல்லவா போறாரு…அதே வேலை, அதே ஸ்டேடஸ் அப்டேட், அதே குட் மார்னிங் . வெளியே இன்னிக்கு வெயிலும் இல்ல ஒரே இருட்டடிப்பு…
அப்போ தான் மதியம் சாப்பிடப் போறதுக்கு முன்னாடி இந்தப் பதிவ படிச்சேன்….அவருடைய கருத்தும் ரொம்ப நல்லா இருந்துச்சு…இங்கிலீஷும் அதே அளவு நல்லா இருந்துச்சு…எனக்கு உடனேயே மனசுல இருந்த மேக மூட்டம் எல்லாம் கலஞ்சு போயிருச்சு.”எவ்வளவோ இருக்கு …எதுக்காக இப்படி “கம்”நு உக்காந்திருக்கணும்னு” தோணிச்சு …
அதுக்கு உங்க பதிலையும் ரொம்ப அக்கறையோட சொல்லியிருந்தீங்க.உங்களுக்கு வர்ற கடிதங்களுக்கு இவ்வளவு அனுபவபூர்வமா பதில் எழுதுறது நீங்க மட்டும் தான்.நல்ல பணி. வாழ்த்துக்கள்.
இது எல்லாத்தையும் சாப்பிடுற மாதிரி, அந்தப் பதிவுக்கு “இலக்கியம், எதிர்வினைகள்” அப்படின்னு tags வச்சிருக்கீங்க.அத பாத்தபிறகுதான், சிரிச்சிருக்கக்கூடாதோன்னு தோணிச்சு..
முத்துகிருஷ்ணன்