கண்ணீரைப் பின் தொடர்தல்:கடிதம்

 

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..

                                                                                 உங்கள் நலம் அறிய விருப்பம் சார் ; இன்று உங்கள் கண்ணீரை  பின் தொடர்தல் என்ற மொழிபெயர்ப்பு நாவல் குறித்த அருமையான தொகுப்பை வாசிதேன். மிக உன்னதமான பணி சார் இது. இதில் குறிபிட்டுள்ள எந்த நாவல்களையும் நான் வாசித்ததுஏன் கேள்வி கூட பட்டது கிடையாது. வாசிப்பின் தளங்களை ,நுட்பமான  வாசிப்பு மன நிலையை  வாசகனுக்கு  விரிந்த படியே காட்டி  போகிறது புத்தகம் .ஒவ்வொரு நாவலின்  கதை  விவரிப்பும் அதன் ஊடாக, இறுதியில் உங்கள் எதிர்வினையும் hats off சார்.இந்த நாவல்களை எல்லாம்  படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேஅன்.எல்லாமே அரிதாக கிடைக்கும் புத்தகம்(except மீசான் கற்கள் , சம்ஸ்கார ஏனெனில் பதிப்பகங்கள்) போல் தோன்றுகிறது.  

இதை எல்லாம் எப்படி தேடி எப்படி படித்தீர்கள் உண்மையிலேயே ஆச்சர்யம் தான் சார் . என்னளவில் தமிழ் இலக்கிய வாசகனுக்கு நீங்களும் எஸ். ராமகிருஷ்ணனும் ஒரு ideal வாசகர்கள்

.இந்த படிக்காத தகுதியான   நாவல்களின்  வரிசையில் (மொழிபெயர்ப்பு வரிசையாக இருந்தாலும் )  நான் இதுவரை படித்ததிலே பிரியமான ரப்பர் இயும் முன் வைகிறேஅன்.இதில்  நீங்கள் குறிப்பிடும் வாசக உணர்வு எனக்கு ரப்பர் இல  கிடைத்தது

 தமிழ்  இலக்கியம் மீதான உங்கள் தீவிரமான பங்களிப்புக்கும் உண்மையான அக்கறைக்கும் ஒரு ஆரம்ப நிலை வாசகனாக என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேஅன்.

Regards
dineshnallasivam
உங்களிடமிருந்துதர்பாரி ராகம்” மாதிரி ஏன் அதை விட மேலாக நம்முடைய தமிழ்நாட்டு  அரசியல் சூழலை வைத்து ஒரு நாவல்  எதிர்காலத்தில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேஅன் மற்றும் ஆசை படுகிறேஅன். தர்பாரி ராகம் மாதிரியான படைப்புகள்  உங்கள் உலகம் அல்ல ; இருந்தாலும் உங்கள் அங்கத நடை ரொம்ப famous and standard sir .படித்தற்கு பிறகும்  அவ்வபோது நினைத்து சிரிக்கும்படியான ஒன்று .

 

 

அன்புள்ள தினேஷ்

 

கண்ணீரைப்பின் தொடர்தல் ஓர் இலக்கிய வழிகாட்டி என்ற முறையில் இந்திய இலக்கியத்தை அறிவதற்கு மிகவும் உதவக்கூடிய ஒரு நூல் என்று கடிதங்கள் மூலம் அறிகிறேன். அந்நூலை இலக்கிய விமரிசனம் என்ற எண்ணத்தில் வாசிக்க தவிர்க்கும் சில வாசகர்களும் இருக்கிறார்கள். இந்திய இலக்கியத்தின் சாராம்சமான ஒரு ஓட்டத்தை அந்நூல்ம் தொடுகிறது என்று துணிந்து சொல்வேன்

தர்பாரி ராகம் போல ஒன்று தமிழில் எழுதலாம். தமிழில் நடைமுறையே சிரிப்பாகத்தானே இருக்கிறது. எனக்கு பல அரசியல்வாதிகளை பார்த்தலே சிரிப்பு வந்துவிடும்

ஜெ

 

அன்புள்ள ஜெ

சமீபத்தில் நான் விரும்பி வாசித்த நூல் என்றால் அது கண்ணீரைப் பிந்தொடர்தல் தான். அதில் உள்ள நாவல்களை நானே முழுமையாக வாசித்தது போன்ற எண்ணம் ஏற்பட்டது. எத்தன வகையான நாவல்கள். நான் அதில் ஒருநாவலைக்கூட வாசித்தது இல்லை. என்னை மிகவும் கவந்த நாவல் என்றால் குடும்பம் சிதைகிறது தான் அந்த நாவலின் கதையை நம் கிராமங்களிலே எப்பவும் காணமுடியும். மனதைவிட்டு நீங்காத புத்தகம்

சரவணன்

 

முந்தைய கட்டுரைலோகி 1..காதலன்
அடுத்த கட்டுரைலோகி,2. கலைஞன்