சொல்வனம்-க.நா.சு சிறப்பிதழ்

கருத்தியல் சார்புகளோ, அரசியல் நிலைப்பாடுகளோ, சமுதாயப் பண்பாட்டு அணிவகுப்புகளில் சாரிகளோ இல்லாத ஒரு நபர் பல பத்தாண்டுகள் தமிழிலக்கியத்தில் தாக்குப் பிடித்து நின்று பல தரப்பினரின் மரியாதையைப் பெறுவதென்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. க.நா. சுப்ரமண்யம் என்கிற ஒரு நபர் 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் வாழ்ந்து இதைச் சாதித்திருக்கிறார். இந்த ஆண்டு அவர் தோன்றி நூறாண்டு ஆகிற வருடம்.

சொல்வனத்தின் 75ஆம் இதழை, அவருடைய நூற்றாண்டு நினைவுச் சிறப்பிதழாகக் கொண்டு வரத்தீர்மானித்ததற்கு இந்தப் பொது நிலையை அவர் பெற்றிருப்பது குறித்து எங்களுக்கிருக்கும் வியப்பும் ஒன்று.

சொல்வனம் க.நா.சு சிறப்பிதழ்

முந்தைய கட்டுரைஅஞ்சலி: பாரி காமனர்
அடுத்த கட்டுரைதிராவிட கிறித்தவம்