வட்டார வழக்கு:கடிதங்கள்

வட்டாரவழக்குக் குறித்த உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது. இன்னும் விரிவாக அந்தந்த  மாவட்ட வட்டார வழக்குச் சொற்களைப் பட்டியலும் இட்டிருக்கலாமோ. புரிதலுக்கு உதவி இருக்கும். இங்கே வழக்கில் ஒழிந்த சொற்களைப் பட்டியல் இடுகின்றனர் சிலர். அதில் பார்த்தால் கோவை மாவட்டம், மதுரை மாவட்டம் இரண்டிலும் ஒருகாலத்தில் பல சொற்கள் ஒன்றாகவே வழக்கில் இருந்திருக்கின்றது. நல்ல அரிய கட்டுரைக்கு நன்றி.
கீதாசாம்பசிவம்.

 

அன்புள்ள ஜயமோகன்
 
உங்கள் கட்டுரையில் (http://jeyamohan.in/?p=2208) ”களேபரம் என்றால் சம்ஸ்கிருதத்தில் கூந்தல்என்கிறீர்கள்.
 
களேபரம் பொதுவாக பேச்சுத் தமிழில் குழப்பம் என அறிந்து கொள்ளப்படுகிறது.  களேபரத்திற்க்கு சென்னை பல்கலைகழக பேரகராதி சொல்வது:
===========
1.
களேபரம் kaēparam : (page 816)
களூசி kaūci
, n. < gu
ūcī. cf. கழுசி. Moon creeper. See சீந்தில். (தைலவ. தைல. 98.)
களேபரம் kaēparam
, n. < kalēbara. 1. Body;
உடம்பு. இக்களேபரத்தை யோம்ப (தேவாரம். 1194, 2). 2. Bone; எலும்பு. (பிங்களம்.) 3. Corpse; பிணம். (திவாகரம்.)
=================

==========================
2. களேவரம் kaēvaram : (page 816)
1194, 2). 2. Bone;
எலும்பு. (பிங்.) 3. Corpse; பிணம். (திவா.)
களேவரம்¹ kaēvaram
, n. < kalēv
ara. See களேபரம்.
களேவரம்² kaēvaram
, n. < T. kalavara- mu. Confusion;
குழப்பம்.
=============================
பேச்சு மொழி களேபரம்’, கலவரத்தின் திரிபு..
 
நான் சமஸ்கிருத அகராதிகளில் களேபரம் (அல்லது கலேவரம்) மயிறு/ கூந்தல் என்ற பொருள்களில் வருகிரதா என தேடிப் பார்த்தேன், ஆனால் அப்படி பொருள் கிடைக்க வில்லை..
முதலில் தேடியது ஆப்தே சமஸ்கிருத அகராதி: அதில் hair என்ற வார்த்தையை தேடினால் 401 சொற்கள் அகப் படுகிறன.
 
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/showrest_?conc.6.1.10956.0.400.apte3
 
அடுத்தது , மக்டோனல்ட் சமஸ்கிருத அகராதி ;அதில் hair க்கு 181 சொற்கள் அகப்படுகிறன.

http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=hair&display=simple&table=macdonell
 
எப்படித் தேடினாலும் கூந்தல் என்ற அர்தத்தில் `களேபரம்` அல்லது `கலேபரம்` கிடைக்க வில்லை

மதிப்புடன்
வன்பாக்கம் விஜயராகவன்

 

அன்புள்ள விஜயராகவன்,

 

களபாரம் என்று தேடியிருக்கவேண்டும். கரிய பாரம். களபாரம் என்று கூந்தலைச் சொல்லும் கவி வழக்கு உண்டு. அச்சொல்தான் களேபரம் என்று திரிந்து வழங்குகிறது. இருட்டான சிக்கலான என்ற பொருளில்.

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன்

 

நாலைந்துமாதங்களாக உங்கள் இணையதளத்தை வாசிக்கிறேன். உங்கள் நகைச்சுவைக்கட்டுரைகள் நான் மிக விரும்பி வாசிக்கிறேன். நான் இரவுகளில் வெகுநேரம் விழித்திருந்து வாசிப்பேன்.அப்போதெல்லாம் என் அறையில் இருந்து வாய்விட்டுச் சிரிப்பதுண்டு. 

 

நான் நெடுங்காலமாக உங்களது நல்ல நகைச்சுவைக்கட்டுரைக்காக காத்திருந்தேன். இப்போது வந்திருக்கும் வட்டார வழக்குஎனக்கு மிகவும் பிடித்திருந்தது.  வாசித்து பயங்கரமாகச் சிரித்தேன் என்று சொல்லவேண்டியதில்லை. உண்மையில் இன்றைய என் மனநிலையையே அது மாற்றிவிட்டது.  குடும்ப விவகாரங்களால் நான் கொஞ்சம் மனக்கஷ்டத்துடன் இருந்தேன்

 

ஆனால் சென்னைத்தமிழைப்பற்றி நீங்கள் இன்னும் கொஞ்சம் சொல்லியிருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்.நான் மிகவும் சென்னையில் ஊறியவன் என்பதனால்.  அந்த அற்புதமான கட்டுரைக்காக என்னுடைய பாராட்டுக்கள்.  உண்மையில் நான் உங்களுக்கு எழுதவேண்டும் என எண்ணி தட்டிதட்டிச் சென்றுகொண்டிருந்தது. கடைசியில் எழுதிவிட்டேன்.

 

டில்லிபாபு

சென்னை

.

 

அன்புள்ள டில்லிபாபு

 

இத்தனை தாமதமான கடிதத்துக்கு மன்னிக்கவும். எனக்கு இத்தனை கடிதங்கள் தேங்குவது வழக்கமே இல்லை. என் ஆஸ்திரேலிய பயணம். அதன் பின் ஈழச்சிக்கல் சார்ந்த மனச்சோர்வு. இப்போது ஆயிரம் கடிதங்கள் வரை பதில் அளிக்கவெண்டியிருக்கிறது. தினம் ஐம்பதுவரை பதில் அளிக்கிறேன். பல கடிதங்கள் ஸ்பாம் பக்கம் போய்விட்டன.

 

நகைச்சுவைக்கட்டுரைகளுக்கு என்ன சிக்கல் என்றால் ஒரு சின்ன புன்னகை எனக்கு வரவேண்டும். அது வராமல் தொடங்க முடியாது. பார்ப்போம். இனிமேல் அடிகக்டி எழுத வேண்டும். பல நண்பர்கள் இணையதளம் ரொம்ப சீரியஸாகப் போகிறது என்றார்கள்

 

ஜெ 

குப்பத்துமொழி

வட்டார வழக்கு

கெட்டவார்த்தைகள்

 

 

முந்தைய கட்டுரைஅஞ்சலி: வ.அய்..சுப்ரமணியம்
அடுத்த கட்டுரைலோகி 1..காதலன்