கானுயிர் புகைப்படக் கண்காட்சி

அன்புமிக்க தோழமைக்கு . .

வணக்கம். நலம்தானே. .!

வருடந்தோறும் நம் அமைப்பு ஒரு திருவிழா போல் நடத்தி வருகிறது ‘உயிர் நிழல்’ – கானுயிர் புகைப்படக் கண்காட்சியை . .

தொடக்கத்தில் கோவை சிதம்பரனார் பூங்காவின் நுழைவாயிலில் ஒரே ஒரு வண்ணக் கூடாரம் அமைத்து, கானுயிர்ப் புகைப்படங்களைக் குண்டூசியின் துணைகொண்டு காட்சிப் படுத்தித் தொடங்கினோம் இதை . .

ஒவ்வோர் ஆண்டும் புதுக் கருத்துகளும், உதவும் கரங்களும் காட்சிப் படுத்தலை மெருகூட்டி வருகின்றன. .

இதில், குறைந்தது இரண்டு மாதம் நாம் எறும்புகளாய்த் தேனீக்களாய்ப் பணி நல்கி வருகிறோம் .

பொதுமக்கள் – மாணவர்கள் – மட்டுமன்றிக் கானுயிர் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், பல்துறை உயர் அலுவலர்கள் மத்தியிலும் இப்பெருநிகழ்வு நன்மதிப்பை ஈட்டியுள்ளது. .

பெருமிதத்தோடு சொல்லிக் கொள்ளலாம் – தேசிய அளவில் இவ்வளவு பெரிய கானுயிர் புகைப்படக் கண்காட்சியை நடத்துபவர்கள் . . நாம்தான்.

உழைப்பும், பொருட்செலவும் வருடத்திற்கு வருடம் கூடி வருகிறது. ஊரெல்லாம் பயணித்துத் துரும்பு துரும்பாய்ச் சேகரித்து இதை நடத்தி வருகிறோம் . .

இந்த ஆண்டு . .
அதிக புகைப்படங்கள்
புதிய பின்னணிப் பொருட்கள் . .
வெளியீடுகள் விற்பனை . .
விழிப்புணர்வுக் கருத்துரைகள் . .

– என விரிந்த அளவில் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. .

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் எதிர்வரும் 05.10.2012 முதல் 14.10.2012 வரையிலான 10 நாட்களுக்குக் கண்காட்சி நடைபெற உள்ளது.

பொருளுதவியைக் கோரும் உரிமையை எடுத்துக்கொள்வது இந்த நேரத்தின் தேவையாகியிருக்கிறது. .
இயன்ற அளவு உதவுங்கள்.

நண்பர்கள், உறவினர்கள், அமைப்புகளை ஈடுபடுத்துங்கள் . .

விழா வெல்லட்டும் . !

பசுமை வாழ்த்துகளுடன்,

அவைநாயகன்
செயலாளர்
ஓசை சுற்றுசூழல் அமைப்பு
9842047855, 0422-4372457

முந்தைய கட்டுரைஇந்தியஞானம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைமகாதேவன்