கருநிலம்,கடிதங்கள்

அன்பின் ஜெயன்,

உங்களது கருநிலம்-2 (http://www.jeyamohan.in/?p=30640) படித்துக்
கொண்டிருக்கிறேன். தலைப்பே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
தலைப்பிலேயே அந்த நிலத்தின் ஒட்டு மொத்த உருவகமும் விரிகிறது. அல்லதுஎனக்கு அப்படித் தோன்றுகிறது.

ஆனால் சொல்ல வந்தது, இஸ்லாமிய தேசியம் பற்றிய உங்களின் கூற்று. SPOT ON.இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலும் கூட மிகப்பலரும், குறிப்பாகஅரசியல்வாதிகள் சொல்ல விரும்பாத கருத்து. ஒரு நாளும் இல்லை என்றுசாதிப்பவர்களே அதிகம். எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன, அகிம்சையைவளர்க்கின்றன என்று ஜல்லி அடிப்பவர்களே அதிகம். நெருக்கிக் கேட்டால்,இஸ்லாமை இஸ்லாமியர்கள் விமர்சிக்கட்டும், கிறிஸ்தவத்தைக் கிறிஸ்தவர்கள்விமர்சிக்கட்டும், இந்து மதத்தை இந்துக்கள் மட்டுமே விமர்சிக்கட்டும்,அடுத்தவன் மதத்தை நீ விமர்சிக்கிறதாலதான் எல்லாப் பிரச்சினையும் என்று ஒருசப்பைக் கட்டு வரும். ஆனால், என் வீட்டுக் கக்கூஸ் உடைந்து என்பெட்ரூமுக்குள் வந்தால் அது என் பிரச்சினை. அதே கக்கூஸ் உடைந்து தெருவில்நடப்பவர் தலையில் கொட்டினால் அது தெருப்பிரச்சினை என்பது மட்டுமே என்பதில்.

இஸ்லாமுக்கு உள்ளிருந்தே அத்தகைய ஆன்மீகவாதிகளின் குரல்கள் எழவேண்டும்,அவை இன்று மேலோங்கியிருக்கும் மதவாதிகளின் குரல்களை வெல்லவேண்டும், பிறமதங்களில் நிகழ்ந்தது போல என்ற உங்கள் கூற்றில் முழு உடன்பாடே. ஆனால்,நீங்களே எழுதியிருப்பது போல, இஸ்லாமின் முக்கிய கட்டளையே அரசியல் ரீதியான
கைப்பற்றுதல் தான். அதை மறுத்துவிட்டு விமர்சித்து விட்டு அத்தனை எளிதாகதலையுடன் நடமாட முடியாது என்றே நினைக்கிறேன்.

தவிர, எனக்குத் தெரிந்த வரை, மற்ற மதங்களைப் பின்பற்றியவர்கள் அரசியல்நோக்கத்துடன் செய்தார்களே ஒழிய, கிறிஸ்தவத்திலோ, இந்து மதத்திலோ, இல்லைபெளத்தத்திலோ அரசுகளைக் கைப்பற்ற உத்தரவிடப்படவில்லை. இந்த அடிப்படைக் காரணத்தினால் தான் அரசையும் , மதத்தையும் பிரிப்பது சாத்தியமாயிற்று.ஆனால் இஸ்லாமின் கதை அதுவல்ல. இதன் காரணமாகவே இஸ்லாமிய நாடுகளில் மதமேஅரசியல் சட்டமாகவும், மத குருவே சர்வ வல்லமை படைத்த தலைவராகவும்இருக்கிறார்.

உள்ளிருந்தே குரல் வந்தால் நல்லது தான். அது மட்டுமே சாத்தியம். ஆனால்,அப்படி வரும் தொண்டைகள் அறுக்கப்படும் என்பது தான் மிகப்பெரிய பிரச்சினை.குரானை இழிவுபடுத்தினால் மரண தண்டனை என்ற மத சம்பந்தமான சட்டத்தை மாற்றவேண்டும் என்று குரல் கொடுத்த காரணத்தினாலேயே பாகிஸ்தானில் ஒரு அமைச்சர்
சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது தான் சமீபத்திய வரலாறு.

In my understanding, we all are already doomed.

அன்புடன்,

நிதின்.

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலமா. உங்களுடைய நமீபிய பயணக் கட்டுரைகளைப் படித்துவருகிறேன்.
நீங்கள் கூறுவது போல ஆப்ரிக்கா நிலம் தரும் மகிழ்வை நானும் உணர்ந்திருக்கிறேன்.முதன் முதலில் நான் நைஜீரியா செல்லும்போது கென்யா வழியாகச் சென்றேன். ஒரு விமானத்தில் இருந்துமற்றொரு விமானத்திற்குச் செல்லும்போது அந்த சுற்றுபுறத்தின் குளிர்ச்சியும், அந்தக் காலை நேரத்து வானில்அழகையும், அந்த மெல்லிய ஒளி வானத்தில் வரைந்த கோலங்களையும் என்னால் நினைவுக்குக் கொண்டு வர முடிகிறது.

நைஜீரியாவில் இருக்கும்போது, நான் வேலை செய்த கம்பனியின் தொழில்சாலை லாகோஸில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அக்போவா என்ற ஒரு அடிமட்ட கிராமத்தில் இருந்தது.
அங்கிருந்து ஒரு அனுபவத்திற்காகக் குறுக்குப் பாதையில் லாகோஸ் திரும்ப முடிவு செய்தோம். தானாக யாரும்பயிர் செய்யாமல் வளர்த்த வழி மரங்கள், மாமரங்கள் இன்னும் பல வகை கனி மரங்கள்- நாங்கள் சென்றசிதைந்த வழி எங்கும். நைஜீரியாவில் மழைக்குப் பஞ்சமில்லை. எதைப் போட்டாலும் விளையும் வளமானமண். வருடத்திற்கு ஆறுமாதம் மழை. ஒரு மாதம் ஹர்மாத்தான் என்ற மூடுபனி. எஞ்சிய நாட்கள் மிதமானகோடை. ஆப்ரிக்கக் காற்றில்தான் நுண்ணுயிரிகள் அதிகம். அதனால் காற்றில் பரவக்கூடிய நோய்களும் உண்டு.

இப்போது நான் சொல்லவந்த கருத்துக்கு வருகிறேன். ஆப்ரிக்க நாடுகள் எல்லாம் ஒரே வகையில் சேருமா?.அங்குள்ள மக்கள் எல்லாம் நட்பானவர்களா ?,ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்வது பாதுகாப்பானதா ?.
இந்த கேள்விகளுக்கு விடை நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. ஒரு முறை உங்களுடன் chat செய்த போது நைஜீரியா பற்றி
கூட நீங்கள் கூறியது , இது கலாச்சார பிரச்னை ( cultural problem ). இது அப்படியே உண்மை. எப்படிநமீபியர்களுக்கென்று சில உள்நாட்டு அரசியல், சமுக மற்றும் சமயம் சார்ந்த மதிப்பீடுகள் அவர்களுடையவாழ்க்கை முறையை தீர்மாணிக்கிறதோ அப்படித்தானே மற்ற அணைத்து ஆப்ரிக்க நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் வாழ்க்கை முறைகளும். நமீபிய நாட்டுக்கு பக்கத்துக்கு நாடான தென் ஆப்பிரிக்காவில்மூன்று மாதங்களுக்கு முன்னால் அலுவல் காரணமாக சுற்றுபயணம் செய்த எங்களுடைய சக ஊழியரின்பாஸ்போர்ட் , அவர் வைத்திருந்த அமெரிக்க டாலர்கள் எல்லாம் , அவர் தங்கியிருந்த விடுதி அறையின்லாக்கர் -ஐ உடைத்து எடுத்துகொண்டு போய்விட்டார்கள். பொதுவாகவே ஆப்ரிக்க நாடுகளில் பகலில்கூட வெளிநாட்டவர்கள் நடமாட முடியாத நிலைதான் இருக்கிறது. ஒன்று பணம் கேட்டு தொந்தரவுசெய்வார்கள் அல்லது பிடுங்கி கொள்வார்கள். சட்டம் ஒழுங்கு மோசமான நாடுகளில் தவறாமல்ஆள் கடத்தல் மற்றும் பணய தொகை கேட்பது.

நைஜீரியாவில் இப்போது ஒரு கிறிஸ்தவரின் ஆட்சி நடக்கிறது. அவர் பெயர் குட் லக் ஜோனாதன். ஒருவர்
நைஜீரியாவில் ஆட்சிசெய்ய வேண்டுமென்றால் அந்த நாட்டில் வடக்கில் பெரும்பான்மை மக்களான
ஹாவுசா முஸ்லிம்கள் வோட்டு போட்டால்தான் முடியும். அப்படி தேர்தலில் வென்று வந்தவர்தான்
குட் லக் ஜோனதன். ஆனால் சில எதிர்கட்சிகளுக்கு ஒரு சிறுபான்மை கிருஸ்துவர் நைஜீரியாவை ஆள்வது
பிடிக்கவில்லை. அதனால் போகோ ஹராம் என்ற இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்பை வளர்த்து
அதன்மூலம் நைஜீரியாவின் அமைதியை கெடுகிறார்கள். இதனால் நாட்டில் பொருளாதாரம் சரிகிறது.
வேலை இன்மை. வறுமை. வழிபரி. ஆள்கடத்தல். நான் நைஜீரியாவை விட்டு வரும் நாளுக்கு பத்து
நாட்களுக்கு முன் எங்கள் தெருவுக்கு பக்கத்துக்கு தெருவில் இருந்த ஒரு இந்தியரை கடத்திவிட்டார்கள்.
நாங்கள் ஊருக்கு வரும் வரை அவர் மீட்கப்படவில்லை. இப்போது அனுதினமும் ஒரு கடத்தல்
நடபதாக செய்திகள் வருகின்றன.

ஆனால் நைஜீரியாவிற்கு அருகில் இருக்கும் கானாவில் நிலைமையே வேறு. ஐரோப்பிய நாடுகள்போல எதிலும் கச்சிதம். ஆனால் நைஜீரியர்கள் அங்கும் ஊடுருவி, நைஜீரியாவில் செய்யும்வேலைகளை செய்துகொண்டு தன் இருகிறார்கள். நைஜீரியாவில் நிலைமை நாளுக்குநாள் கெடுவதைகணக்கில்வைத்து எங்கள் கம்பெனி கானாவில் ஒரு தொழில்சாலையை தொடங்கிவிட்டோம்.நைஜீரியாவை சுற்றி இருக்கும் பெனின் கூட நல்ல நாடுதான். நைஜீரியர்கள் மன்னன் முதல்,குடிகள் வரை அனைவரும் பேராசை காரர்கள் என்று ஒரு நைஜிரியரே சொல்ல கேட்டிருக்கிறேன்.அவர்களிடம் நம் நாட்டில் உள்ள போக்கு வரத்து வசதிகளையும், கல்வியையும் பற்றி நான் சொல்லும் போதெல்லாம்அவர்களிடம் இருந்து ஒரு பெருமூச்சு வர கண்டிருகின்றேன்.

நான் கிழக்கு ஆப்ரிக்க நாடான எதியோப்பியாவுக்கும் சென்று வந்திருக்கிறேன். அவர்களுக்கென்றுஒரு கலாச்சாரம் இருக்கிறது. நைஜீரியர்கள் அளவிருக்கு அவர்கள் பேராசை காரர்கள் அல்ல.வெளி நாட்டு காரர்களை அவர்கள் எட்டி நின்றுதான் பார்கிறார்கள். குற்றங்களும் குறைவு.எப்போது மிதமான குளிர். பகலிலும் கூட. ஆப்ரிக்காவின் பழமையான நாகரிகங்களில் எதியோபிய
நாகரிகமும் ஒன்று.

எனக்கு ஆப்ரிக்கா பற்றித் தெரிந்ததை சொல்லவேண்டும் என்று நினைத்தேன். பகிர்த்துகொள்கிறேன்.வேறு எங்கேனும் பயணம் செய்வதை இருந்தால் அங்கே வெளி நாட்டவர்களுக்குப் பாதுகாப்புஇருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவது நன்று.

பி.கு: நைஜீரியர்களைப் போலப் பிறர்க்கு மரியாதையை செய்பவர்களையும், மகிழ்ச்சியானவர்களையும் பார்க்க முடியாது. ஒருவரை மற்றவர் காணும்போது நேரத்துக்கு தக்கவாறு வணக்கங்களை பரிமறிகொள்வர்.

ஒரு வருடத்தில் முதன் முதலில் ஒருவரை நவம்பர் மாதத்தில் பார்த்தால் கூட மற்றவர் புத்தாண்டு வாழ்த்து சொல்வர்.

ஒரு சிறு உதவி செய்தல் கூட நூறு நன்றி சொல்லி வாழ்த்துவார்கள். அந்த மாதிரி மக்கள் உள்ள ஒரு நாட்டில்தான்
இரும்புக்கதவுகள் உள்ள வீடுகள் நிறைய உள்ளன.

முந்தைய கட்டுரைபாலகுமாரனின் உடையார் பற்றி
அடுத்த கட்டுரைகாந்தியின் கண்கள்