கூடங்குளம்-கடிதங்கள்

நலமா?

உங்கள் ‘கூடங்குளம்’ இன்று வாசித்தேன்…எனக்குள் புகுந்து என் உணர்வுகளை கடத்தி வார்த்தைகள் ஆக்கியது போல
இருந்தது.

இயலாமை மற்றுமே அடையாளமாய் ஆகிப்போன ஒரு சராசரி இந்தியனாய் இன்னும் இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்.
அம்மாமக்கள் மற்றும் அம்மாமனிதர் நோக்கத்தை இன்னும் இம்மாக்கள் கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கிறார்களே என்ற
வேதனை விஞ்சி நிற்கிறது…

உங்கள் படைப்புகளை பலமுறை வாசித்ததுண்டு.உங்கள் தளத்தில் இன்று தான் நுழைந்துள்ளேன்.உங்கள் படைப்புகளுக்கு நிகர்
இந்த பதிவுகள்…

நேசத்துடன்,

ரெவெரி

Dear Jeyamohan,

I read your recent article on ‘Koodankulam’. You have mentioned that the people there did not resort to violence – it was only a ‘govt. violence’, and almost all the media reports are wrong. You have added that the blockades of govt. offices, and throwing of sand have been termed ‘violence’. But any media report that I came across, be it regional or national, have mentioned the hurling of shoes, logs and stones on police by the protesters. They specifically mentioned the burning of a checkpoint, after which the shooting occured. For a sample, please look at this report by ‘The Hindu’: http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3880885.ece

Are these not instances of violence by the people? Are police not meant to control them? It is hard to believe that all the media reports something that has not exactly happened there. If all the media reports were false, what exactly happened at the checkpoint? Who burnt it? Who hurled stones at the police? There were reports saying that one of the inspectors had a stone hit on his head. No media reported otherwise, inluding ‘dinamani’, which is even now in support of the Koodankulam protesters.

I am writing this mail because I am in a confusion as to what had happened there, especially because you have mentioned that people didn’t resort to violence. Kindly clarify as to what happened, and how the reports have gone wrong.

Regards,
Thirumulanathan.D

இனிய ஜெ.மொ,

உங்களது கூடங்குளம் கட்டுரை, சோர்ந்திருந்த மனதிற்கு ஆறுதலாக அமைந்தது. நீங்கள் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் நிஜம். நன்றி. ஃபுகுஷிமா பேரழிவு நிகழ்ந்த போது, இங்கு வசித்தவன் என்ற முறையில் எனக்குத் தெரிந்த சில விஷயங்களை இந்தச் சுட்டியில் எழுதியுள்ளேன். ஒழிமுறி திரைப்படம் மிக நல்ல வரவேற்பு பெற்றிருப்பது அறிந்து பர்க்கத் துடிக்கின்றேன். ஏதாவது இணையத்தில் கிடைத்தால் ஒழிய, இங்கு பார்க்க வாய்ப்பில்லை.

http://www.manavelipayanam.blogspot.in/2012/09/blog-post_12.html

செந்தில்குமார்

டோக்கியோ.

அன்புள்ள ஜெயமோகன்
எந்தா நீங்கள் மலையாள மெகா ஸ்டார் ஆயிட்டு…வல்லிய சேதி (மன்னிக்கவும்….சந்தோசத்தை எப்படி சொல்லுவதென்ற தத்தளிப்பு )

கூடங்குளம் பதிவு படித்தேன். அதில் தின மலர் இதனை அணுகிய விதமும் நமது மத்திய வர்க்க மக்களின் மனசாட்சியினையும் எழுதி இருந்தீர்கள்.

பெரும்பாலானோர் கேளிக்கையாகவே இந்தப் பிரச்சனைகளை அணுகுகிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் தின மலர் மற்றும் மத்திய வர்க்க மக்களின்
அத்தகைய அணுகுமுறைக்கு இன்னொரு பெரிய காரணம்

“ஒரு நாட்டுக்காக ஒரு கிராமம் தியாகம் செய்யப்படலாம்….ஒரு கிராமத்துக்காக ஒரு மனிதனை தியாகம் செய்யலாம்” என்ற விஷயங்களில் நம்பிக்கை உடையவர்களாகவே இவர்கள் வெளிவருகிறார்கள். தனி மனிதக் கஷ்டமோ போராட்டமோ இவர்களை இதனால் பாதிப்பதில்லை.

அதே அணுமின் நிலையம் சென்னையில் இவர்கள் வாழும் இடங்களின் அருகில் வரட்டுமே…அப்பொழுது இதே விஷயத்தைச் சொல்ல மாட்டார்கள்…
இந்த மாதிரி விஷயங்களை நம்புபவர்களின் பாசாங்கு (hypocrisy) இது

அன்புடன்
ஸ்ரீதர்

முந்தைய கட்டுரைபோற்றப்படாத இதிகாசம் -பாலா
அடுத்த கட்டுரைஆண்மகன்