அன்புள்ள ஜெ,
இன்று நாம் வாசிக்கும் காந்தியின் எழுத்துக்களை அந்த வரலாற்றுப் பிரக்ஞையுடன் ஆவணப் படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் மகாதேவ் தேசாய். அவரது மகனான நாராயண் தேசாய் இன்று வாழும் காந்தியர்களில் மிக முக்கியமானவர். காந்தி வாழ்ந்த காலத்தில் அவருடன் தன் இளமைப் பருவத்தைக் கழித்து இன்று நம்முடன் வாழும் வெகு சில காந்தியர்களில் ஒருவர். அவர் காந்தி கதா எனும் நிகழ்ச்சியைக் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக நாடெங்கும் நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரைக்கு வரவிருக்கிறார். செப்டம்பர் 11 முதல் 15 வரையிலான தேதிகளில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில் தினம் தோறும மாலை 5 முதல் 8 மணிவரை அவரது நிகழ்ச்சி ஏற்பாடாகி உள்ளது. காந்தி மீதும் காந்தியம் மீதும் ஆர்வமுள்ள அன்பர்கள் தவறவிடக்கூடாத நிகழ்ச்சி. மதுரை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள வாசகர்கள் ஒரு நாளேனும் இந்த நிகழ்வை சென்று பார்க்கலாம்.
காந்தி இன்று தளத்தில் வெளியான அவருடைய மொழிபெயர்ப்புக் கட்டுரை
காந்தியுடன் வளர்தல்
நன்றி
அன்புடன்
சுனில்