ஒழிமுறி-வெளியீடு

என் முதல் மலையாளப்படம் ஒழிமுறி. நாளை [7-9-2012] வெளியாகிறது. படம் வெளியாவது ஒரு விசித்திரமான அவஸ்தை. பெரும்பாலும் முதல்நாளில் சரியான சித்திரமே வராது. முதலில் படம்பார்க்கச்செல்பவர்கள் குழப்பமான, முடிவெடுக்கமுடியாத ஒரு பெரும்கூட்டம். கூடவே அது ‘ஸ்டார்’ படம் அல்ல என்றால் தொடர்ச்சியாக அங்கே கூட்டமில்லை, இங்கே கூட்டமே இல்லை என்றவகைக் கருத்துக்களும் வரும். நல்லவேளை நான் ஊரில் இல்லை

மணிரத்னம் சொன்னார். ‘ஆமாம் , எத்தனை சூப்பர்ஹிட் பார்த்தாலும் அந்த ஒருவாரமும் அவஸ்தைதான். ஆனால் அதுதான் சினிமாவில் இருப்பதில் கிடைக்கும் உச்சகட்ட ஆனந்தமும்கூட. ஒரு படத்தின் அலைகள் முடிந்ததும் அடுத்த பதற்றத்துக்காக மனம் ஏங்க ஆரம்பித்துவிடும்’

உண்மைதான்

டிரெய்லர்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=iSoEiBUJI-w

முந்தைய கட்டுரைநடன மகளுக்கு: அர்விந்த் கருணாகரன்
அடுத்த கட்டுரைபக்திமரபு-கடிதங்கள்