ஐயா,
என் பெயர் நந்தகுமார், நான் ஒரு சென்னை வாழ் மலையாளி, தமிழ் மொழியில் ஆர்வம் உள்ளதால் தற்போது ஒரு தமிழ் நாளிதழில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.
ஓய்வு நேரங்களில் கேரள மாநிலத்தைக் குறித்த கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவிலும், தமிழகத்தைக் குறித்த கட்டுரைகள் மலையாளம் விக்கிபீடியாவிலும் சேர்ப்பதுண்டு.
கேரளாவில் ஆலப்புழாவைச் சேர்ந்த டாக்டர் என்.எம். நம்பூதிரி (பேராசிரியர்-வரலாற்று ஆய்வாளர்) என் நண்பர். அவரைப் பற்றி ஒரு கட்டுரை நேற்று முன்தினம் அப்லோடு செய்து விட்டு, தமிழ் லிங்குகள் தேடும்போது தான் கோழிக்கோடு சாமூதிரி மன்னரைப் பற்றியுள்ள ஆங்கில விக்கிபீடியா கட்டுரையின் தமிழ்க் கட்டுரை இல்லை என்பது தெரிய வந்தது.
சாமூதிரி மன்னர் என்று கூகிலில் தேடியபோது தற்செயலாக உங்களது கட்டுரைகள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.
நான் அப்லோடு செய்துள்ள சில தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள் இதோ.. இவை தங்களது கவனத்திற்குக் கொண்டுவர வாய்ப்பு கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்.
நன்றி,
வணக்கம்
(நந்தகுமார்)
Links
(1) டாக்டர் என்.எம். நம்பூதிரி (வரலாற்று ஆய்வாளர்)
(2) வி.வி. ரவி (வயலின் இசைக்கலைஞர்)
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF
(3) ஹரிணி ரவி (பாடகி)
(4) கண்ணம்புழா பகவதி அம்மன் கோவில்
அன்புள்ள நந்தகுமார்
நானும் மலையாளத்தைப்பற்றிய ஏராளமான விக்கி கட்டுரைகள் போட்டிருக்கிறேன்
என்னுடைய கருத்தில் முனைவர் விஷ்ணு நம்பூதிரி எழுதிய மலையாள ஃபோக்லோர் நிகண்டுவில் உள்ள விஷயங்களை மேலும் விரிவாக விக்கியில் ஏற்றலாம். தமிழுக்கும் மலையாளத்துக்குமான பொது வெளி அதில் உள்ளது
ஜெ