கவிபேதம்

கவிப்பெருக்க தளமான செ.ப.சிவராசனின் தளத்துக்குச் சென்றுவந்த வாசகர்கள் உயர்கவித்துவநகைச்சுவைத்தளம் அது என்பதை மின்னஞ்சல் வழியாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

கீழ்க்கண்ட கவிதையை பாடபேதம் பற்றிய என்னுடைய கட்டுரைக்கு அடிக்குறிப்பாகக் கொடுக்கவேண்டும் என்று சொன்ன நண்பர்களுக்கு நன்றி

பாண்டவர்பூமி – அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்

Lyrics : Sinthanai Kaviyarasu Snekan.

ஆண்:

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,

அந்த நினைவுகள்நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

அது ஒரு அழகிய நிலாகாலம்,

கனவினில் தினம் தினம் முல்லா போகும்,

அது ஒரு அழகிய நிலாகாலம்,

கனவினில் தினம் தினம் முல்லா போகும்,

நிலவுகள் சேர்ந்து,

பூமியில்வாழ்ந்ததே,

அது ஒரு பொற்காலம்,

காற்றும் கூட எங்களுடன்,

இரவினில்தூங்க இடம் கேட்கும்,

மலை துளி கூட ஏன் தாயின்,

மடியினில் தவள தினம்ஏங்கும்,

நத்தை கூட்டின் நீர் போதும்,

எங்களின் தாகம்தீர்துகொல்வோம்,

கத்தும் கடலும் கை கட்ட,

கவிதைகள் போலே வாழ்ந்துவந்தோம்,

பெண்:

தாயின் மடியில் தினம் இருந்து,

காலையில் மீண்டும்உயிர் பெறுவோம்,

கனவினில் காலையில் ஒழி பெயர்த்து,

சொல்லி சொல்லிசுகமாய்,

தினம் சிரிப்போம்,

ஆண்:

ஐந்தெழுத்து புது ஒளியை,

அறியவைத்தால் ஏன் அண்ணை,

அண்ணன் தங்கை ஐவருமே,

நேசம் கொண்டு தமிழ்மண்ணை,

நிலவுகள் சேர்ந்து,

போஒமியில் வாழ்ந்ததை,

அது ஒருபொற்காலம்,

அன்னை ஊட்டிய பிடி சோற்றில்,

ஆயுள் முழுக்க பசிமறந்தோம்,

ஒற்றை கண்ணில் அடி பட்டால்,

பத்து கண்ணிலும் வலிகண்டோம்,

பள்ளிக்கூடம் தந்ததில்லை,

பாசம் என்னும் நூல்ஒன்றை,

வேதங்கள் நான்கும் சொன்னதில்லை,

எங்கள் கதை போலேவேறொன்றை,

பெண்:

கண்களும் நீர் துளி கண்டதில்லை,

அழுதிட அவைகளும்பழகவில்லை,

கருப்பா சிவப்பா தெரியவில்லை,

கவலைகள் இதுவரைமுளைத்ததில்லை,

ஆண்:

சேகரித்து வைப்பதற்கு,

தேவை இன்று எதுவும்இல்லை,

இறைவனுக்கும் எங்களுக்கும்,

இடைவெளிகள் இருந்ததில்லை,

நிலவுகள்சேர்ந்து ,

பூமியில் வாழ்ந்ததை,

அது ஒரு பொற்காலம்,

கவிதையை விட பாடபேதம் அற்புதமாக இருக்கிறது. நான் பாண்டவர்பூமி படம் பார்க்கவில்லை. ஆப்கானிஸ்தான் தாலிபான் ஆட்சி வீழ்ந்தபோது அங்கிருந்து கிளம்பி பாகிஸ்தான் வந்த படூயின் குடும்பம் ஒன்று அங்கே அவர்கள் வாழ்ந்த காலத்தை எண்ணி ஏங்கும் பாடல் என்று நினைக்கிறேன்.

கனவினில் தினம் தினம் முல்லா போகும்,

அது ஒரு அழகிய நிலாகாலம்,

என்றவரி அதைத்தானே குறிக்கமுடியும்? கனவிலும் நினைவிலும் முல்லாக்கள் போகும் நிலாக்காலம் இப்போது பாகிஸ்தானில் இல்லையா என்ன?

ஆனால்

மலை துளி கூட ஏன் தாயின்,

மடியினில் தவள தினம்ஏங்கும்

என்றவரி கொஞ்சம் கவித்துவப்பூடகம் கொண்டது. மலைத்துளி என்று கூழாங்கல்லை சொல்லியிருப்பது அழகு. ஆனால் தாயின் மடியில் ஏன் தவளை ஏங்குகிறது? நத்தைக்கூட்டின் நீர் விஷம் என்பதை

நத்தை கூட்டின் நீர் போதும்,

எங்களின் தாகம்தீர்த்துகொல்வோம்,

என்ற அற்புதமான வரி சுட்டிச் சுட்டிக் காட்டுகிறது. அதேசமயம்

கனவினில் காலையில் ஒழி பெயர்த்து,

என்ற வரி ஒன்றும் கெட்டவார்த்தை இல்லை என நம்புகிறேன்

இந்த கவிதையை தட்டச்சு மூலம் பாடபேதம் செய்து செறிவூட்டியவர் ஓர் யாழ்ப்பாணத்தமிழர் என்பது

ஐந்தெழுத்து புது ஒளியை,

அறியவைத்தால் ஏன் அண்ணை,

என்ற வரி வழியாக தெரியவருகிறது.

பாடபேதம் என்பது பாடங்களில் பேதம் உருவாக்குவது. கவிதைகளில் பேதம் உருவாக்குவதை கவிபேதம் என்று சொல்லலாம் என்று அகராதி சொல்லித்தானாகவேண்டும்.இதை உருவாக்கிய பாடபேதிக்கு வணக்கம்

முந்தைய கட்டுரைகாந்தி: புறவயநோக்கில்
அடுத்த கட்டுரைசென்னையில் தோட்டக்கலை