தசமபாகம்

போதகர் நண்பர் காட்சன் சமீபத்தில் என் வீட்டுக்கு வந்திருந்தபோது கிறித்தவ சபைகளில் தசமபாகம் என்ர பேரில் பெரும் பணம் திரட்டப்படுவதைப்பற்றி அவரிடம் நான் கேட்டேன். கிறித்தவ மதம் மற்ற எந்த மதத்தையும் விட  மேலாக சமூக அக்கறை கொண்டது என்பதே என் எண்ணம். ஓர் அனாதை கிறித்தவனாக இருக்கையில் மதம் அவனுக்கு உணவும் வீடுமாக வருவதைப்போல எந்த மதத்திலும் இன்று வருவதில்லை என்பதும் உண்மை. ஆனால் இன்று இந்தியாவின் கிறித்தவ சமூகம் ஒரு ஏழைச்சமூகம் அல்ல. அது திரட்டும் பணத்துக்கு ஏதாவது தணிக்கைகள் உள்ளனவா? ஏனென்றால் மனிதர்கள் எங்கும் மனிதர்கள்தான். செல்வமோ பிரம்ம்மாண்டமான ஒரு சக்தி.

மேலும் சமீபகாலமாக கவற்ச்சியான தனியார் கிறித்தவ போதகர்கள் தென் மாவட்டங்களில் முளைத்துவருகிறார்கள். அனைவருக்குமே பால் தினகரனும், மோகன் சி லாசரசும்தாம் முன்னுதாரணங்கள். அவர்களும் தசமபாகம் குறித்த அந்த பைபிள் போதனையையே ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என்றேன்.

எனக்கு அவர் பைபிளை மட்டும் சார்ந்து சார்ந்து அளித்த விளக்கத்தை அவரது வலைப்பூவில் எழுதியிருக்கிறார். மதத்தின் சாராம்சமான ஒன்று நிறுவனமாக ஆகும்போது ஏற்படும் நுண்மையான திரிபை நடைமுறைத்தளத்தில் நின்று எழுதியிருக்கும் கட்டுரை. அவரது முதல் திருமணநாள் குறித்த கட்டுரையின் நெகிழ்வானது

 

http://pastorgodson.wordpress.com/

முந்தைய கட்டுரைஒருங்கிணைதல்:ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைராஜமார்த்தாண்டன் கடிதங்கள்