நாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது

கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம் சார்பில் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு,”கண்ணதாசன் விருது”ஜூன் 27 சனி மாலை வழங்கப்படுகிறது.இந்த அமைப்பு
முதல்முதலாக இந்த விருதை வழங்குகிறது.பாராட்டுப் பட்டயமும்,ரூ.50,000/  பணமுடிப்பும் வழங்கப்படும்.

மறைந்த பின்னணிப் பாடகர் திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் மகள் திருமதி டி.ஆர்.சாவித்திரி இந்த விருதைப் பெறும் இன்னொருவர்.

 

கண்ணதாசனின் தீராக்காதலர் திரு.கிருஷ்ணக்குமார், தன் சொந்தப் பொறுப்பில் இந்த விருதை வழங்குகிறார்.இவர் கடந்த சில ஆண்டுகளாய் சென்னையில், கண்ணதாசன்
பெயரிலும் எம்.ஜி.ஆர் பெயரிலும் இத்தகைய விருதுகளை வழங்கி வருகிறார்.
விருது வழங்கும் விழா,கோவை பாரதீய வித்யா பவன் அரங்கில் 27-6-2009 மாலை 6.30
மணிக்கு நிகழும்.
அமைப்புக்குழு செயலாளர் என்ற முறையில் குழும  திரு.மரபின்மைந்தன் முத்தயா இத்தகவலை தெரிவித்திருக்கிறார்.

 

தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான நாஞ்சில்நாடன் இதுவரை குறிப்பிடத்தக்க விருதுகள் எதனாலும் கௌரவிக்கப்படாதவர்.  சமீபத்தில் நண்பர்களை இழந்துள்ள நிலையில் இவ்விருது அவருக்கு ஓர் ஆறுதலாக அமையும் என நினைக்கிறேன்

நாஞ்சில் நாடன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

நாஞ்சில் பேட்டிகள்

http://dhalavaisundaram.blogspot.com/2008/04/blog-post.html

http://kadarkarai.blogspot.com/2008/04/blog-post.html

நாஞ்சில் நாடனின் கும்பமுனி

ஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை

நாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா

மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)

முந்தைய கட்டுரைகமலா சுரையா:விவாதம்
அடுத்த கட்டுரைசில வரிகள்