அன்புள்ள ஜெ,
சொல்வனம் என்ற இணைய இதழைப்பற்றி வாசித்தேன். ஏதோ ஈழத்தவர்தான் ‘சொல்வினும்’ என்ற பேரில்
இதழ் ஆரம்பித்திருக்கிறார்கள், வழக்கம்போல நீங்கள் அச்சுப்பிழையாகக் கொடுத்துவிட்டீர்கள் என்று நினைத்துவிட்டேன். பரவாயில்லை தமிழ் இஷ்டத்துக்கு வளைகிறது
சிவம்
சென்னை
அன்புள்ள சிவம்
அது கூட நல்ல தலைப்புதான் ஈழத்தவர் அதைப்பற்றிச் சிந்திக்கலாம். ‘இஞ்சேருங்கோ’ என்றுகூட வைக்கலாம். பெண்ணியப்பெயராக இருக்கும். ஏன் ‘விசர்’ ? பின் நவீனத்துவ இதழுக்கு வைக்கலாம். ‘பஞ்சி’ என்று ஓய்வுநேர கேளிக்கைகள் சம்பந்தமான இதழுக்கு வைக்கலாம். ‘ஓம்’ என்று வைத்தால் ஆன்மீகமாகவும் இருக்கும் ஆமோதிப்பாகவும் இருக்கும். கடல் போல சாத்தியங்கள்!
ஜெ
அன்புள்ள ஜெ,
திரு மணிவண்ணன் எழுதியிருப்பதைப் பார்த்தால் ஜெயமோகன் இன் ஐ ஒரு அரசியல்கட்சியாக ஆக்கிவிடலாம் போல இருக்கிறதே?
சிவம்
சென்னை
அன்புள்ள சிவம்,
அதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்.[ தொலைபேசியில் பதில் சொல்லும் கருவிக்குப் பெயரா அது?]
ஜெ
**
ஷாஜி அனுப்பிய குறிய செய்தி
If Adam and Eve were Chinese, we would have still been in paradise Because they would have ignored that stupid apple and eaten the snake
என் பதில்…
அவர்கள் இந்தியர்களாக இருந்திருந்தால் பாம்பைப்பிடித்து சாமியாக உட்கார வைத்து ஆப்பிளை அதன்முன் படைத்து விஷயத்தை இன்னும் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவந்திருப்பார்கள்
ஜெ