ரப்பர் கடிதங்கள்

உங்களுடைய ” ரப்பர் ” சமீபத்தில் படித்தேன். ஒரு சந்தேகம். தங்கம் எப்படி இறந்தாள் என்பதை அதில் சொல்லவே இல்லையே.வாசகர் ஊகத்திற்கு விட்டு விட்டீர்களா ?

அதே போல ஒரு எழுத்தாளர் அந்தக் கதையில் ரப்பர் பாலைக் குடித்துத் தற்கொலை செய்து கொள்வார்கள் என்ற தன் அனுபவமே சொல்லி இருக்கிறார் என்றார். ஆனால் அந்தக் கதையில் யாரும் ரப்பர் பால் குடித்து இறந்த போவது போல வரவில்லையே ?

எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அற்புதம்.

சாத்தப்பன் நாகப்பன்

அன்புள்ள சாத்தப்பன்,

தங்கம் இறந்த விஷயம் நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.

ரப்பர்பாலைக் குடித்துத் தற்கொலைசெய்வது நாவலில் இல்லை. ஆனால் பலசமயம் தீவிரமாக வாசிப்பவர்கள் கதையில் இருந்து இன்னும் விரிவான ஒரு கதையை சுயமாக அடைவார்கள். அப்படி ஒரு மனப்பதிவு ஓர் எழுத்தாளருக்குவந்திருந்தால் அது நாவலின் வெற்றிதான்

ஜெ

அன்புள்ள ஜெ

ரப்பர் நாவலை சமீபத்தில் வாசித்தேன். மிக மோசமாக வடிவமைக்கப்பட்ட நாவல். அது ஒரு நவீனநாவல் என்ற சித்திரமே மனதில் வரவில்லை.

ஆனால் எனக்கு நாவல் சிறப்பான அனுபவமாக அமைந்தது.உங்களுடைய பலவீனமான ஆரம்பகட்ட நாவல் என்று பலர் சொன்னார்கள். ஆனால் அப்படி இல்லை என்று நினைக்கிறேன். அதில் பெருவட்டர் அவரது மனைவி குளம்கோரி கண்டன்காணி ஆகிய கதாபாத்திரங்களை unique ஆனவை என்று சொல்வேன். பெருவட்டத்தியின் இளமைக்காதல் பற்றி எழுதப்பட்டிருக்கும் இடம் கிளாஸிக்

செல்வகுமார்

அன்புள்ள செல்வகுமார்

நன்றி

நான் அந்நாவலை இன்றும் முக்கியமாக நினைப்பது அதில் உள்ள சமூகப்பரிணாம சித்திரத்துக்கும் மேலாக மானுட நிலைமையின் இரு வேறு எல்லைகள் அதிலுள்ளன என்பதனால் தான். ஓர் எல்லை கண்டன்காணி இன்னொரு எல்லை குளம்கோரி

ஜெ


ரப்பர் விமர்சனம்

முந்தைய கட்டுரைமழைக்கோதை
அடுத்த கட்டுரைகோதை-கடிதங்கள்