மருதம் என்ற பள்ளி

ஜெ..

என் நண்பரும், சென்னை கிருஷ்ணமூர்த்தி “பள்ளி”யின் முன்னாள் ஆசிரியருமான அருணைப் பற்றிச் சிலமுறை உங்களுக்கு எழுதியுள்ளேன்.

திருவண்ணாமலையில் அவரது “மருதம்” பள்ளி செயல் பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க அவர் மற்றும் அவர் மனைவியின் முயற்சியால் உருவான பள்ளி.

இது போன்ற முயற்சிகள் தரும் உற்சாகம் அளவிட முடிவதே இல்லை.

மேன்மையான நோக்கத்தோடும், ஆத்மசுத்தியோடும் துவங்கப் படும் விஷயங்களுக்குத் தடைகள் ஒரு பொருட்டல்ல என்று தோன்றுகிறது.

அடுத்த முறை அங்கு சென்றால், நீங்கள் கட்டாயம் அவரைப் பார்க்கவேண்டும்.

ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் இதை – இருந்தாலும் உங்களுக்குச் சொன்னேனா என்று தெரியவில்லை – day by day with bhagwan என்ற புத்தகத்தை எழுதியவரும், ரமண சேய் என்று தன்னை அழைத்துக் கொண்டவருமான தேவராஜ்முதலியாரின் கொள்ளுப் பேரன் அருண் – எனவே திருவண்ணாமலை.

அன்புடன்

பாலா

அன்புள்ள பாலா

நம்மையும் புறத்தையும் அவதானிக்கக்கூடிய ஒரு பெருவாழ்வு என்பது நல்லூழின் விளைவாக அமைவது. அவற்றுக்கான வழிகளை இயற்கை திறந்துகொடுக்கும்

திருவண்னாமலை சென்றால் அவரைச் சந்திக்கவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைவேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே!’
அடுத்த கட்டுரைமழைக்கோதை