சொல்வனம்

நண்பர்களே,

சொல்வனம் என்ற புதிய மாதமிருமுறை இணைய இதழைத் தொடங்கியிருக்கிறோம். இந்த இதழை http://www.solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், புத்தகவிமர்சனம், அறிவியல் சர்ச்சைகள், சமூகம், இசை, வாழ்வியல் ரசனை, மொழிபெயர்ப்பு, இதழ்பார்வை எனப் பல்வேறு திறப்புகளில் படைப்புகள் கொண்டிருக்கும் முதல் இதழே இந்த இதழின் பன்முகத்தன்மையைக் காட்டுவதாய் இருக்கும் என நம்புகிறோம்.

இந்த இதழுக்கு உங்களுடைய ஆதரவையும், படைப்புகளையும் எதிர்பார்க்கிறோம். வன்முறையைத் தூண்டாத, காழ்ப்புணர்வில்லாத எந்த படைப்பையும்,  அது எந்தத்துறை, கொள்கையைச் சார்ந்ததாய் இருப்பினும் வரவேற்கிறோம். உங்கள் மேலான கருத்துகளையும், படைப்புகளையும், விமர்சனங்களையும் [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

முதல் இதழின் உள்ளடக்கம்:

திலீப்குமாரின் இலக்கிய உலகம் – ச.திருமலைராஜன்
அக்ரகாரத்தில் பூனை – திலீப்குமார் – சிறுகதை
அரசியலாக்கப்படும் அறிவியல் – க்ளோபல் வார்மிங் புனைவா? உண்மையா? – அருணகிரி
திசை – சுகா
இந்திய இசையின் மார்க்கதரிசிகள் – மாண்டலின் ஸ்ரீனிவாஸ், கத்ரி கோபால்நாத், தெபாஷிஷ் பட்டாச்சார்யா ஆகியோரை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை – ஸ்ரீ
ஒலிக்காத குரல்கள் – கோபிகிருஷ்ணனின் ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ புத்தகத்தை முன்வைத்து – ஹரன்பிரசன்னா
அறிவியல் கல்வியின் சமுதாயத்தேவை – அரவிந்தன் நீலகண்டன்
வன்முறையின் வித்து – ஓர் விவாதம் – ஹரிவெங்கட்
மகரந்தம் – இதழ் பார்வை

அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழுவினர்.
http://www.solvanam.com

முந்தைய கட்டுரைநினைவஞ்சலி : ராஜ மார்த்தாண்டனுக்கு
அடுத்த கட்டுரைராஜமார்த்தாண்டன் அஞ்சலி,சென்னை