மேச்சேரி கூத்துப்பள்ளி

தொல்கலைகளைத் தாய்வடிவம் மாறாது நமது பண்பாட்டு அடையாளங்களாக வளர் தலைமுறையினருக்குக் கையளிக்கும் முயற்சியில் சேலம் மாவட்டம் மேச்சேரி ஏர்வாடியில் இயங்கி வரும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையம் தோற்பாவை, கட்டபொம்மலாட்டம், கூத்து முதலான நிகழ்த்துக்கலைகளைப் பயிற்றுவிக்கும் பள்ளியொன்றை நேற்று துவங்கியிருக்கிறது. ஓராசிரியர் ஐந்து மாணவர்களுடன் ஆரம்பமாகியுள்ள இப்பள்ளி துவக்க விழாவில் கூத்து வாத்தியார்கள் கூலிப்பட்டி சுப்பரமணி, ஏகாபுரம் சுப்ரு, அம்மாபேட்டை கணேசன், செட்டிப்பட்டி சின்னபையன், அம்மாபேட்டை நடராஜன் முதலானோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

இவண்
மு.ஹரிகிருஷ்ணன்

[email protected]

முந்தைய கட்டுரைபருவமழை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹஸாரே, சோ – எதிர்வினை