கே.வி.ஜெயஸ்ரீக்கு விருது

மொழிபெயர்ப்புக்கான நல்லி திசை எட்டும் விருது 2012ல் கே.வி.ஜெயஸ்ரீ மொழியாக்கம்செய்த ஒற்றைக்கதவு என்ற நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையாளச்சிறுகதை உலகின் புதிய நட்சத்திரங்களில் ஒருவரான சந்தோஷ் எச்சிக்கானம் எழுதிய கதைகள் இவை. வம்சி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நூல்.

கே வி ஜெயஸ்ரீ

கே.வி.ஜெயஸ்ரீயை எனக்கு 1992 முதல் தெரியும். அதாவது அவர்கள் தங்கை கே.வி.ஷைலஜாவை என் நண்பர் பவா செல்லத்துரை மணம்புரிவதற்கு முன்னரே. இன்றுவரை அந்த நட்பு நீடிக்கிறது.

ஜெயஸ்ரீ ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். அவர்கள் மகள் சுஹானாவும் எட்டாம் வகுப்பில் இருந்தே மொழியாக்கங்கள் செய்துவருகிறார். சுகானா இப்போது கல்லூரி மாணவி.

ஜெயஸ்ரீ கவனமாகவும் உழைத்தும் மொழியாக்கம் செய்யக்கூடியவர்.அவரது மொழியாக்கங்கள் எப்போதுமே எனக்கு நிறைவளித்துள்ளன

ஜெயஸ்ரீக்கு என் வாழ்த்துக்கள்.

ஜெயஸ்ரீ பேட்டி


கே.வி ஜெயஸ்ரீ இன்னொரு அறிமுகம்


கே.வி.ஜெயஸ்ரீ இரண்டாம் குடியேற்றம் மதிப்புரை

முந்தைய கட்டுரைஒழிமுறி இணையதளம்
அடுத்த கட்டுரைபருவமழை- கடிதங்கள்