ஒரு கர்மயோகி

ஒரு பெரிய மருத்துவமனையையே தனிப்பட்ட வகையில் உருவாக்கும் அளவுக்கு தொழில் அனுபவமும் தொழில்ஞானமும் அவருக்கு இருந்தன. ஆனால் தன் தனிப்பட்ட உயர்வையே பெரிதென்று நினைக்கிற எண்ணம் அவரிடம் ஒருபோதும் இயங்கியதில்லை என்பதால் அந்த உயர்வான வாழ்வை நினைத்த நேரத்தில் சட்டென்று உதறிப் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட முடிகிறது. பொதுவாழ்வில் சலிப்பு தோன்றும் தருணத்தில் பழக்கத்தின் காரணமாக அத்தோடு ஒட்டிக்கொண்டிருக்காமல், அதைவிட்டு விலகி நிற்கவும் அவரால் முடிகிறது. அடிப்படையில் அவர் அன்பும் ஆற்றலும் விவேகமும் பொறுமையும் சத்தியநாட்டமும் நிறைந்த அபூர்வ மனிதர்.

டாக்டர் தி செ சௌ ராஜனின் தன்வரலாறு பற்றிப் பாவண்ணன் கட்டுரை

முந்தைய கட்டுரைகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து – ராஜகோபாலன் ஜானகிராமன்
அடுத்த கட்டுரைகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து -2 ராஜகோபாலன் ஜானகிராமன்