கடிதங்கள்

டியர் ஜெ

நாஞ்சில் நாடனை Virginiaவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . கம்பராமாயணம் பற்றிப் பேசும்படி கேட்டுக்கொண்டேன் . பேச்சு எப்பிடி போகும்னு தெரியல தம்பி பாப்போம் என்றார் . பேச ஆரம்பித்தவுடன் மடை திறந்த வெள்ளம் போல் தமிழ்ச் சொற்களைப் பற்றி ஆரம்பித்து கம்பனில் ஆழ்ந்தார் . அம்பறாத்தூணி என்ற சொல்லுக்கு விளக்கம் , சீதைக்கும் அனுமனுக்கும் அசோக வனத்தில் நடந்த உரையாடல் போன்றவற்றை மிகவும் அழகாக விளக்கினார்.

நாஞ்சில் நாடனைபோல் ஒரு நல்லாசிரியன் கம்பராமாயணம் குறித்துப் பேசுவதை ஆவணப்படுத்தினால் என்னைப் போன்ற தமிழ் இலக்கிய வாசலில் இருக்கும் பலருக்கும் உதவியாக இருக்கும்

குறைந்த பட்சம் நாஞ்சில் அவர்கள் ஊட்டி முகாம் மற்றும் அமெரிக்காவில் நிகழ்த்திய கம்பராமாயணச் சொற்பொழிவுகளை videoவாக உங்கள் தளத்தில் வலையேற்றம் செய்தால் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் பயனடைவார்கள்

நன்றி
ஆனந்த் சுந்தரம்

அன்புள்ள ஆனந்த் சுந்தரம்

நாஞ்சில்நாடனுக்கு ஒரு வலைத்தளம் உள்ளது. http://nanjilnadan.com

அதில் அவரது ஆக்கங்கள் நிறையவே கிடைக்கின்றன

ஜெ