அன்பின் ஜெ எம்.,
நல்ல தமிழ்ப்படைப்புக்களை[கவிதை,சிறுகதை,குறுநாவல்,நாவல்] வலை ஏற்றுவது, அவற்றை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வது, இந்திய மொழியின் தரமான படைப்புக்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து அளிப்பது இன்னும் மொழியாக்கம் செய்தாக வேண்டிய தரமான படைப்புக்களைச் சுட்டிக் காட்டுவது ஆகியவற்றோடு அயல் மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் வாழும் -தமிழ் எழுத்தை வாசிக்க அறியாத அடுத்த தலைமுறையினரின் வசதிக்காகக் குறிப்பிட்ட படைப்புக்களை ஆங்கில எழுத்து வடிவில் தமிழ் ஒலிபெயர்ப்பாகத்-transliteration-தருவது என அனைத்தும் அடங்கிய அடங்கிய ஆய்வுத் திட்டம்ஒன்றை ugc உதவியுடன் நான் பணியாற்றிய மதுரை பாத்திமாக் கல்லூரியின் ஆங்கில,தமிழ்த் துறையினர் இணைந்து மேற்கொண்டிருக்கின்றனர்.
அந்தத் தளத்தின் பெயர்
http://www.classicsintamil.com
தங்கள் யானைடாக்டர் சிறுகதையின் தமிழ்மூலம்- ஆங்கில மொழியாக்கம் -ஒலிபெயர்ப்பு ஆகியன இப்போது அதில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
DOWNLOAD செய்து படித்தால் விரியும் மூன்று பத்திகளில் மூலம்,மொழிபெயர்ப்பு,ஒலிபெயர்ப்பு என ஒரு படைப்பு சார்ந்த அனைத்தையும் ஒருசேரப்பார்க்க முடியும்.படித்து ஒப்புநோக்க முடியும்.
இது கல்வித் துறை சார்ந்து எடுக்கப்படும் சிறு முயற்சி…எங்கோ எவருக்கோ ஏதாவது எட்டாதா என்னும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவது.
இதன் குறை களைந்து மேம்படுத்த உங்கள் ஆலோசனைகளை முடிந்தபோது சொல்லுங்கள்….
பி.கு;நான் இதில் விலகி நிற்கும் ஒரு பார்வையாளர் மட்டுமே..அவ்வப்போது சில படைப்புக்களைச் சேர்க்கலாம் என இங்கே தில்லியில் இருந்தபடி பரிந்துரைப்பதோடு சரி…
எம்.ஏ.சுசீலா
புதுதில்லி
(தமிழ்ப் பேராசிரியர்-பணிநிறைவு,
பாத்திமாக் கல்லூரி,மதுரை)
www.masusila.com