சி.கே.கே.அறக்கட்டளை விருது

ஈரோட்டில் அமரர் சி.கே.கந்தசாமி முதலியார் அறக்கட்டளை வழங்கும் இலக்கியவிருது இவ்வருடம் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது 25000 ரூபாய் பணமுடிப்பு அடங்கியது இவ்விருது.

விருது வழங்கும் நிகழ்ச்சி சி.கே.கே. அறக்கட்டளையின் 34 ஆவதுஆண்டு இலக்கியவிழாவில் நிகழவிருக்கிறது. விழா 29–7-2012 அன்று ஈரோடு வடிவு சுப்ரமணியன் திருமணமண்டபத்தில் நிகழ்கிறது.

நிகழ்ச்சிகள்

காலை 9 30க்குப் படத்திறப்பு மற்றும் அறக்கட்டளை உதவிகள் வழங்குதல்

காலை 10 மணிக்கு மரபின்மைந்தன் தலைமையில் கவியரங்கம். [பங்கெடுப்போர் தங்கம்மூர்த்தி, சக்திஜோதி,சதீஷ்குமார்,கவியன்பன் கெ.ஆர்.பாபு, ஆண்டாள் பிர்யதர்சினி, இசைக்கவி ரமணன்]

மாலை4 மணிக்கு இலக்கியவிருது வழங்கும் விழா. எழுத்தாளர் அறிமுகம் மா.ரவி உதயன். விருது வழங்குவோர் திரு கெ.கெ.பாலுச்சாமி, திரு.கெ.தங்கவேல் மற்றும் திரு ந.கிருஷ்ணன், சி.கே.கே.அறக்கட்டளை

மாலை 5 மணிக்குல் கருத்தரங்கம் தலைமை வே.இறையன்பு. கருத்துரையாளர்கள் திரு ஆறுமுகத்தமிழன், திருமதி அ.வெண்ணிலா

மாலை 8 மணிக்கு சிறப்புரை . எழுத்தாளர் பிரபஞ்சன்.

முந்தைய கட்டுரைநாத்திகவாதம்- ஒருகடிதம்
அடுத்த கட்டுரைபழமொழிகள்