கொடுமணல் அகழாய்வு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் நடந்த கொடுமணல் அகழாய்வு குறித்து, பிரன்ட்லைன் இதழில் வெளியான கட்டுரை (http://www.frontline.in/stories/20120810291506200.htm ). தாதுக்களில் இருந்து இரும்பு பிரித்தெடுத்தல், எக்கு தயாரித்தல், பாசிமணிகள் செய்தல் போன்ற பல தொழில்கள் இருந்த தொழில் நகரமாகக் கொடுமணல் இருந்துள்ளது. வட இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் கி மு நான்காம் நூற்றாண்டு முதலே வணிகத் தொடர்பு இருந்துள்ளதை இந்த அகழாய்வு உறுதி செய்கிறது. அதோடு இந்த பகுதியில் பல இன மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. தமிழ் பிராமி, பிராகிருதப் பெயர்கள் உள்ள பானைகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்தில பத்மாசன நிலையில் ஒரு எலும்புக்கூடு காணப்படுகிறது (இதே போன்ற ஒரு எலும்புக்கூடு மதுராந்தகத்திற்கு அருளில் உள்ள பெரும்பேர் என்னும் இடத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது).

நன்றி.
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்
தளம்: https://sites.google.com/site/tnexplore/

முந்தைய கட்டுரைகோணங்கி
அடுத்த கட்டுரைஎங்கும் குறள்