உ.வே.சா -கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகனுக்கு:

உ.வே.சா மீதான அவதூறு குறித்து நீங்கள் எழுதிய விரிவான கண்டனம் வெறும் வார்தைசாடலாக இல்லாது நவீனதமிழை உயிர்ப்பித்த அவர் கொடைகளுக்கு ஒரு இன்றியமையாத ஆவணமாய் அமைந்துள்ளது. எனக்கு உ.வே.சா என்பவர் “தமிழ்த்தாத்தா” என்றும் ராமபாண பூச்சிகளால் அழியும் நிலைகளில் இருந்த பழந்தமிழ் ஓலைச்சுவடிகளைப் புத்தகங்களாய்ப் பதிப்பித்தவர் என்ற அளவிலே மட்டும் தெரியும். தங்களின் கட்டுரை ஒன்றே தமிழ் Philology துறைக்கு அவரின் மகத்தான பங்களிப்பை அமெரிக்காவில் பெட்டி தட்டும் என் போன்ற கணிப்பொறிக் குரங்குகளுக்கு அறிமுகம் செய்தது என்றால் மிகையாகாது.

எனது கொள்ளுத்தாத்தா சுப்பிரமணிய சர்மா என்பவர் உ.வே.சாவின் பிரியத்திற்குரிய மாணவர். ஓலைச்சுவடி நிபுணரான அவர் தமிழாராய்ச்சி பலவற்றில் பங்கெடுத்தவர். தங்களின் கட்டுரை அவரை நினைத்து சிறிது கணம் பெருமிதம் கொள்ள வைத்தது. அதற்கு என் நன்றி. சாதி போன்ற அற்பக் காரணங்களினால் தமிழ் மொழி இன்று ஒரு சிறிய சித்தாந்தத்தின் பிணைக் கைதியாய் கிடப்பதைக் குறித்து வருத்தம் கொள்கிறேன்.

கீழேயுள்ள சுட்டியில் உ.வே.சாவின் புகைப்படம் ஒன்றையும் இணைத்துள்ளேன், தங்கள் பார்வைக்கு.

https://picasaweb.google.com/100736808662484049579/SubrahmanyaSharma?authuser=0&feat=டிறேக்ட்ளின்க்

–கார்த்திகேயன் வாழ்குடை

’மூவா முதலா உலகம்’ என்ற சிந்தாமணியின் முதல் வரியைப் பொருள்கொள்ள உவேசா மொத்த சமண,பௌத்த தத்துவத்தையும் வாசிக்கிறார்.

இதைப்படிக்கப் படிக்க மனசு பதறுது….உடம்பெல்லாம் ஒரு நிமிடம் மயிர் கூச்செறிகிறது…நன்றி உணர்வால் கண்ணீர் தாரை தாரையாக வருது…

எப்படிப்பட்ட வேலை…பல்லாயிரம் புதிர்கள் மலையென நோக்க முடிவே தெரியாத முயற்சி …இது ஒரு பெருங்காதல்…..

பிரமிக்க வைக்கிறது….எத்துணை கொடுத்தாலும் தகும்…. !!!

sridhar visvanath

முந்தைய கட்டுரைசங்கசித்திரங்கள்
அடுத்த கட்டுரைமேலாண்மை அத்வைதம்-கடிதம்