சங்கசித்திரங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சங்கசித்திரங்கள் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். சங்ககாலம் தொட்டு ஜெயமோகன் வரை தமிழ் உருவாக்கிய படைப்பாளிகளைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்க முடியாது.சங்க சித்திரங்கள் முதலில் மலையாளத்தில் எழுதியதாகக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் . அது புத்தகமாக வெளி வந்துள்ளதா? பதிப்பகத்தின் பெயர் தெரிவித்தால் என் மலையாள நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த உதவியாக இருக்கும்

அன்புடன்

ராமகிருஷ்ணன்

அன்புள்ள ராமகிருஷ்ணன்

சங்கசித்திரங்கள் முதலில் மலையாள வார இதழ் மாத்யமத்தில் தொடராக வெளிவந்தது. நூல்வடிவம்பெறவில்லை

தமிழில் விகடனில் வெளிவந்தபின் கவிதா பதிப்பகம் வெளியிட்டது. தமிழினி மலிவுவிலைப்பதிப்பாக வெளியிட்டது. தமிழினி, கவிதா இரு பதிப்பகங்களின் பதிப்புகளும் கிடைக்கின்றன

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்- ஞானத்தின் தனிமை :சுநீல்கிருஷ்ணன்-2
அடுத்த கட்டுரைஉ.வே.சா -கடிதம்