அஞ்சலி : மோதி ராஜகோபால்

எண்பதுகளில் ஜெயகாந்தனின் ‘ஜெயஜெயசங்கர’ என்னும் நாவல் ‘மோதி பிரசுரம்’ என்நும் வெளியீடாக நான்கு பகுதிகளாக வெளிவந்தது சிலருக்கு நினைவிருக்கலாம்.   அதை வெளியிட்டவர் மோதி ராஜகோபால். ஜெயகாந்தனின் மிகநெருக்கமான நண்பர்களில் ஒருவர். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் நட்பு அது.

திருச்சியைச்சேர்ந்த செல்வந்த நகைவணிக வட இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர் மோதி ராஜகோபால்.  தமிழிலக்கியம் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். என்னிடம் பலமுறை என் படைப்புகளைப் பற்றி பேசியிருக்கிறார்.நான் அவரை நேரில் காணவாய்க்கவில்லை

நாஞ்சில்நாடனுக்கும் சென்ற பதினைந்துவருடங்களாக ஆத்மார்த்த நண்பராக திகழ்ந்தார். நாஞ்சிலின் பேச்சில் ‘மோதிசார்’ வராத நாளே இருப்பதில்லை. திருச்சி சென்று அறைபோட்டு அவருடன் அமர்ந்தும் படுத்தும் விடியவிடிய இலக்கியம் பேசிவிட்டு திரும்புவார் நாஞ்சில். எழுபத்தொரு வயதான மோதி கொஞ்சகாலமாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிழ்ச்சை செய்துகொண்டார். பலனில்லை

கடைசியில் கோவையில் சிகிழ்ச்சையில் இருந்தார். நாஞ்சில் தினமும் சென்று கவனித்து வந்தார். இன்று அதிகாலை மோதி ராஜகோபால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.  அவருக்கு அஞ்சலி.

முந்தைய கட்டுரைபுண்ணியபூமி,மறுகடிதங்கள்
அடுத்த கட்டுரைகவிதை ஒன்றுகூடல்