சிங்கப்பூர் இலக்கிய நிகழ்ச்சி

நவீனத்தமிழ் இலக்கியக் கருத்தரங்கமும் – “கடவுள் அலையும் நகரம்” கவிதை தொகுப்பு வெளியீடும்

 

       சிங்கப்பூர் தங்கமீன் பதிபகத்தின் வெளியீட்டில் §¸.À¡ÄÓÕகனின் “கடவுள் அலையும் நகரம்” கவிதை தொகுப்பும் ஜாசின் தேவராஜன் அவர்களின் “அரிதாரம் கலைந்தவன்” சிறுகதை தொகுப்பும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (14.06.2009) சிங்கப்புரில் வெளியீடு காணவுள்ளது. நவீனத்தமிழ் கருத்தரங்கம் எனும் தலைப்பில் பிரபல மலேசிய எழுத்தாளர்கள் சை.பீர்முகமது, கே.பாலமுருகன், தேவராஜன், சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஜெயந்தி சங்கர், கண்ணபிரான், சித்ரா ரமேஸ் போன்றவர்களின் நவீன இலக்கியம் குறித்த உரைகளுடன், கலந்துரையாடல் நிகழ்வில் தொலைபேசியின் வாயிலாக இந்திய எழுத்தாளர்கள் மனுஷ புத்திரன், சல்மா, சாரு நிவேதிதா போன்றவர்கள் நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்களாகத் தொடர்புக் கொண்டு உரையாடுவார்கள். நிகழ்வின் விவரங்கள் பின்வருமாறு:

 

திகதி: 14.06.2009 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : மாலை மணி 4.00க்கு

இடம் : தேசிய நூலகம், 14ஆவது தளம், (POD) 100, விக்டோரியா ஸ்ட்ரீட்

       (புகிஸ் எம்.ஆர்.டி நிலையம் அருகில்) சிங்கப்பூர்

தொடர்புக்கு : 016-4806241 (கே.பாலமுருகன்)/ 012-6194140 (ஏ.தேவராஜன்)

             +6582793770 (பாலுமணிமாறன் – சிங்கப்பூர்

முந்தைய கட்டுரைராஜமார்த்தாண்டன் கடிதங்கள்
அடுத்த கட்டுரைமோதி,கடிதம்