மேலாண்மை அத்வைதம்-கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

நான் அனுப்பிய தொடர்பு உங்களை அடைந்திருப்பது கண்டு மகிழ்ச்சி ..ஆனால் முதல் தொடர்பினை நான் தெளிவாக முன்வைக்கவில்லையோ என்று ஒரு ஐயம்..அது நம்மை நாமே வடிவமைத்துக் கொள்ளலாம், அதனால் எந்த எல்லையும் மனதின் தூரம் வரை என்பதை வெளிப்படுத்துவதாய்த் தோன்றுகிறது.

மேலாண்மையியலில் ‘லீன்’ ‘Lean’ என்று ஒரு வழிமுறை எல்லோராலும் மதிக்கப்படுகிறது, அது பற்றிய ஒரு கலந்துரையாடலை உங்களுக்கு அனுப்புகிறேன் http://www.linkedin.com/groupAnswers?viewQuestionAndAnswers=&discussionID=117569616&gid=1801885&commentID=85048841&trk=view_disc&ut=1tZtC21WuvQBg1..அதில் எனது கருத்தினை கீழே தருகிறேன் .

Sivakumar M.U.P. • Will it be correct to understand, Lean as ‘common sense’ specialized through the development of Humanity, to improve ‘righteousness’ & harmonizing of Individuals, Organizations & Society.

Sivakumar M.U.P. • It seems ‘Lean’ is there,while one is teaching a kid to see straight on the path ; if the child learned to focus on the path it will automatically learns how to balance without falling. That is the motto (can I consider this as strategy?) of Nations esp. India being ‘True’ ; ‘Truth alone triumphs’ (http://en.wikipedia.org/wiki/Satyameva_Jayate)

உங்களது பார்வை இந்தக் கருத்துக்கு மேலும் மெருகேற்றும் என்று நம்புகிறேன்.

ஜப்பானில் உள்ள Toyota நிறுவனம் எப்படி இந்த வழிமுறையைக் கையாளுகிறது என்று ஆய்ந்து அமெரிக்காவில் வெளிவந்துள்ள ஒரு புத்தகத்தின் தொடர்பினையும் கீழே தந்துள்ளேன், கண்டிப்பாய்த் தங்கள் மைந்தருக்கு, மற்றும் நண்பர்களுக்கு உபயோகமாயிருக்கும் என கருதுகின்றேன்.
Defnition of Management “the systematic pursuit of desired conditions by utilizing human capabilities in a concerted way.” (மனமிருந்தால் மார்க்கமுண்டு)

For the Complete Book – http://www.simio-china.com/ downloads/ToyotaKata.pdf

For the crisp presentation ..http://www-personal.umich.edu/~mrother/Presentations.html

குவைத்தில் உங்கள் உரையை நானும் பார்த்தேன் ..உங்களுடன் உரையாட இயலவில்லை ..இம்முறை விடுமுறைக்கு வரும்போது உங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

அன்புடன்,

சிவகுமார்

அன்புள்ள சிவகுமார்

மேலாண்மை சம்பந்தமான கட்டுரைகளை நான் பொதுவாக வாசித்துப்போவதுடன் சரி. என்னுடைய இடமல்ல என்னும் எண்ணம் உண்டு

மேலும் மேலாண்மை என்பதே நம் செயல்கள் தேவையாகும், நம் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் எல்லையை வகுத்துக்கொண்டு அதற்குள் கொள்கைகளை உருவாக்குவது. அதில் முழுமைநோக்கு சாத்தியமா என்ற ஐயம். ஆதாரமற்ற ஐயமாகவும் இருக்கலாம்

ஆனாலும் சுவாரசியமான கட்டுரைகள். கவித்துவமான குறிப்புகள் கொண்டவை

நன்றி

சந்திப்போம்

ஜெ

முந்தைய கட்டுரைஉ.வே.சா -கடிதம்
அடுத்த கட்டுரைவிவசாயிகள்