வணக்கம், நான் தங்களின் நாவல்களில் பல நேரம் புதைந்துள்ளேன். அது என்ன காரணம் என்று எனக்கே தெரியவில்லை. தங்களின் எழுத்துப் பிரயோகத்தின் வழி நான் பல முறை பிரயாணம் செய்துள்ளேன்.
எனக்கும் ஏதாவது எழுத வேண்டும் என்ற கட்டளை மனதிலிருந்து வரும். ஆனால் அதற்கான கருவும் உந்துதலும் இல்லாததால் அவை நின்று போகும். மேலும் நாம் எழுதும் எழுத்தில் ஒரு சத்தியமும் ஒரு அனுபவமும் இருத்தல் நல்லது என நினைக்கத் தோணும். ஒரு எழுத்தாளன்தான் எல்லாமுமாகவும் மாறி அதற்குள் பயணிக்கிறான்.
தங்களின் உதவி எழுதுவதற்கான வித்தினைத் தரும் என்று நம்புகிறேன். ஆகவே தங்களின் அறிவுரையை நாடுகிறேன். வாசித்தல் சலிப்பில்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.
நன்றி,
அன்புடன் வாசகன்
சிவா
அன்புள்ள சிவா
நான் எழுதுவதைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்
எழுதும்கலை என்ற பேரில் தமிழினி வெளியீடாக ஒரு நூல் வெளிவந்துள்ளது. என் இணையதளத்தில் கீழ்க்கண்ட கட்டுரைகள் உள்ளன
நல்ல கட்டுரையில்
கதைத்தொழில்நுட்பம் ஒரு பயிற்சி
சிறுகதை ஒரு சமையல் குறிப்பு
நாவல் ஒரு சமையல்குறிப்பு