ஜெயமோகனின் 10 நூல்கள்

ஜெயமோகனின் 10 நூல்கள் சிறப்பு சலுகை விலைத் திட்டம். உயிர்மையில் சிறப்புச் சலுகை விலையில்

 

ஜுலை 15 வரை

 

 

ஜெயமோகனின் 10 நூல்கள்

Inside India

விலை ரூ.1380.

சிறப்பு சலுகை விலை ரூ.1100.

 

Outside India

விலை ரூ.2995.

சிறப்பு சலுகை விலை ரூ.2700.

 

முழு விபரங்கள் கீழ்கண்ட இணைப்புகளில்.

 

http://www.uyirmmai.com/Publications/Default.aspx

 

http://www.uyirmmai.com/Publications/ViewCombo.aspx?bid=10001

 

 

 

தமிழின் முன்னணி சிறுகதை எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் ஜெயமோகனின் 10 தலைசிறந்த நூல்களை இப்போது சிறப்புச் சலுகை விலையில் உயிர்மை பதிப்பகம் அளிக்கிறது. ஜெயமோகனின்  3 சிறுகதை தொகுப்புகள் 1 குறுநாவல் தொகுப்பு, 6 கட்டுரைத் தொகுப்புகள் கொண்ட இந்த நூல் தொகுதி அவரது பரந்துபட்ட இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்துவதுடன், சிந்தனை மற்றும் அனுபவம் சார்ந்து வாசகர்களுக்கு புதிய வெளிச்சங்களைத் தருகிறது. படித்துப் பாதுகாக்கவும், நண்பர்களுக்கு பரிசளிக்கவுமான தலைசிறந்த நூல் தொகுதி இது. இந்தியாவில் தபால் செலவு இலவசம். வெளிநாட்டு விலை தபால் செலவு உள்ளிட்டது.

 

பண்ம செலுத்தும் முறைகள்

 

1) Credit Card மூலம் பணம் செலுத்துபவர்கள் CC Avenue கட்டணமாக 7.5% கூடுதலாக செலுத்தவேண்டும். ICICI  வங்கிக் கணக்கு மூலமாகவோ, Western Union மூலமாகவோ பணம் செலுத்துகிறவர்கள் புத்தக விலையை மட்டும் செலுத்தினால் போதுமானது.

 

2)  ICICI வங்கிக் கணக்கு வழியாக பணம் செலுத்துகிறவர்கள் கீழ்க்கண்ட பெயரில் செலுத்தலாம்.

 

Account Name: UYIRMMAI PATHIPPAGAM

Account No: 000105018931

Bank Name: ICICI Bank

Address: No.1 Cenotaph Road, Chennai-18

 

3) Western Union மூலம் பணம் செலுத்துபவர்கள் S.Abdul Hameed  என்ற பெயருக்கு அனுப்பவும்.

 

4) இது தொடர்பாக மின்னஞ்சல் தொடர்புகளை [email protected] அல்லது [email protected]  என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

 

தொலைபேசி எண் : 91-44-24993448

 

உயிர்மை பதிப்பகத்தின் சென்னை முகவரில் இந்த சலுகை விலையில் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம்.

 

உயிர்மை பதிப்பகம்

11/29 சுப்பிரமணியம் தெரு

அபிராமபுரம்

சென்னை- 600018

 

 

 

 

 

சலுகை விலையில் கிடைக்கும் ஜெயமோகனின் 10 நூல்கள் இவை

 

 

  1) ஜெயமோகன் சிறுகதைகள்

இந்தியா ரூ. 300.00

வெளிநாடு ரூ. 625.00

ISBN Number             :    81-88641-24-3

பக்கம்    496

 

மனித வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கிய அந்தரங்கமான உணர்ச்சிபூர்வமான தேடலை உள்ளடக்கிய கதைகள் இவை. அத்தேடலை அன்றாட வாழ்க்கையிலிருந்து தத்துவத்திலும், வரலற்றிலும், அறிவியலிலும் விரித்துக் கொள்பவை. ஆகவே பலவகையான கதைக்கருக்களும் கதைக்களங்களும் கூறுமுறைகளும் கொண்ட வண்ணமயமான கதையுலகமாக உள்ள தொகுப்பு இது. எல்லாக் கதைகளும் அடிப்படையில் கதை என்ற வடிவைத் தக்கவைத்தபடி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்ட நவீன ஆக்கங்கள். இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத பல கதைகளை உள்ளடக்கிய முழுமையான தொகுப்பு இது.

 

 

2) ஜெயமோகன் குறுநாவல்கள்

இந்தியா ரூ. 180.00

வெளிநாடு ரூ. 420.00

ISBN Number             : 81-88641-25-1

பக்கம்   264

 

இத்தொகுதியில் உள்ள குறுநாவல்கள் சிறுகதைக்குரிய வேகமான கதையோட்டத்துடன் நாவலுக்குரிய விரிவான சித்தரிப்பும் கொண்டவை. இக்கதைகள் விதவிதமான நிலக்காட்சிகளின் வழியாக வேறுபட்ட வாழ்க்கைகளைக் கண்டபடி பயணம் செய்யும் அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத குறுநாவல்கள் பல உள்ள முழுமையான தொகுப்பு இது.

 

 

3) ஊமைச்செந்நாய்

இந்தியா ரூ. 100.00

வெளிநாடு ரூ. 240.00

ISBN Number             : 978-81-89912-78-9

பக்கம்  176

 

சென்ற நான்கு வருடங்களில் நான் எழுதிய கதைகள் இந்தத் தொகுதியில் உள்ளன.இத்தொகுதியில் உள்ள கதைகளில் இப்போது நான் காணும் பொது அம்சம் கதைதான்.இவற்றில் நுட்பமான யதார்த்தத்தளம் சார்ந்த ஆக்கங்கள் உண்டு. மிகைபுனைவுகளும் உண்டு. ஆனால் முழுக்க முழுக்க படைப்பூக்கத்தின் தற்செயலை நம்பி எழுதப்பட்டவை. அதனாலேயே ஆசிரியனும் விளக்கிவிட முடியாத பல தருணங்கள் கொண்டவை. செவ்வியலின் அடிப்படையான ஓர் இயல்பை இவற்றில் வாசகர் காணமுடியும். வரிகள்தோறும் செறிந்திருக்கும் கவித்துவ உட்குறிப்புகள்.தமிழ் நவீனகவிதைகள் அடைந்தவற்றைவிட அதிகமான கவித்துவப்படிமங்களை இந்த உரைநடை முன்வைத்துச் செல்கிறது.

 

 

4) நிழல்வெளிக் கதைகள்

இந்தியா ரூ. 70.00

வெளிநாடு ரூ. 170.00

ISBN Number             : 81-88641-65-0

பக்கம்  120

 

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் எல்லா மொழிகளிலும் தொன்றுதொட்டே இருந்து வருகின்றன. மேலும் மேலும் உருவாகிவருகின்றன. அச்சம், வியப்பு, அருவருப்பு, எனும் உணர்வுகள் இக்கதைகளில் உச்சம் கொள்கின்றன. உண்மையில் இவை மானுட மனத்தின் ஆழங்களில் எழும் அலைகளின் மறுவடிவங்களே. ஆகவேதான் உலகமெங்கும் இலக்கியத்தில் பேய்க் கதைகள் முக்கியமான இடம் வகிக்கின்றன. இக்கதைகள் பீதியும், பரபரப்பும் உருவாகும்படி எழுதப்பட்டவை. ஆனால் தீவிர வாசிப்பில் மனிதமனதின் அறிய முடியாத ஆழங்களை நோக்கி இட்டுச் செல்பவை.

 

 

5) சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்

இந்தியா ரூ. 100.00

வெளிநாடு ரூ. 250.00

ISBN Number             : 81-88641-49-9

பக்கம்  216

 

இது சுந்தர ராமசாமி குறித்த ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறது என்றே எண்ணுகிறேன். இந்நினைவுகள் எனது ஒரு காலகட்டத்தின் சித்திரங்களாகவே என் பார்வைக்குப் படுகின்றன. இது சுந்தர ராமசாமி அல்ல, என்னுடைய சுந்தர ராமசாமி என்று படுகிறது. இதேபோலப் பல சுந்தர ராமசாமிகள் இருக்கலாம். அவர்களும் எழுத்தில் வரக்கூடும். அது வரவேற்கத்தக்கதே. நம் காலகட்டத்து மாபெரும் ஆளுமைகளில் ஒன்று அவர். சிலைகளை உருவாக்க வேண்டாம். அவை சரியும். ஆனால் மூதாதையரை உண்டு செரித்துக் கொள்வோம். அது நம் வேருக்கு நீர்.(ஜெயமோகன் ), சுந்தர ராமசாமி மறைந்த சில தினங்களில், ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் மகத்தான ஆளுமையை வாசகனின் நினைவில் ஆழமாகக் கட்டி எழுப்புகிறது. சு.ராவைப் பற்றி மனநெகிழ்ச்சியூட்டும் கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது அழகியல் மற்றும் தத்துவ நோக்கை வெளிப்படுத்தும் உக்கிரமான உரையாடல்களும் மிகுந்த இந்நூலின் முதல் பகுதி உயிர்மை இதழில் வெளிவந்தபோது வாசகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சு.ராவின் நினைவுகளைப் பல்வேறு தளங்களில் விரித்து எழுதிய இந்நூல் அவரைப் பற்றிய படைப்பூக்கமுள்ள ஓர் ஆவணமாகத் திகழ்கிறது.

 

6) ஆழ்நதியைத் தேடி

இந்தியா ரூ. 70.00

வெளிநாடு ரூ. 170.00

ISBN Number             : 81-88641-64-2

பக்கம்  112

 

தமிழிலக்கியத்தின் ஆன்மீக சாரம் என்ன? என்னுடைய இளம் வாசக நண்பர் ஒருவரிடமிருந்து வந்த வினா இது. தமிழிலக்கியத்தின் ஆன்மீக சாரம் என்ன? அவருக்கு விளக்கும் முகமாக எனக்கு நானே அதை வரையறை செய்யவும் இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில் அது எவ்வண்ணம் செயல்படுகிறதென நோக்கவும் முயன்றேன். அவருக்கு எழுதிய கடிதங்களை மீண்டும் கட்டுரையாக எழுதினேன். இது அது. ஆன்மீகம் குறித்த எந்த ஒரு விவாதத்தைப் போலவே இதுவும் வாசகன் தன் பதில்களைத் தானே தேடிச் செல்லும் பயணத்துக்கு உதவக்கூடிய கூடுதல் வினாக்களை எழுப்பவும், எழுப்பப்பட்ட வினாக்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும் மட்டுமே உதவும் என்று எண்ணுகிறேன். பதில்களை முன்வைப்பது அல்ல இதன் நோக்கம்; சில திறப்புகளை உருவாக்க முயல்வதே. அது நிகழுமென எண்ணுகிறேன்.

 

 

7 நவீன தமிழிலக்கிய அறிமுகம்

இந்தியா ரூ. 175.00

வெளிநாடு ரூ. 360.00

ISBN Number             : 81-89912-16-X

பக்கம்  296

 

நவீன இலக்கியத்தினுள் நுழைய விரும்பும் வாசகனுக்குரிய முழுமையான எளிய கையேடு இது. நவீன இலக்கியம் என்றால் என்ன, அதனுள் நுழையும்போது வரும் சிக்கல்கள் என்ன, ஒரு வாசகனாக எப்படி நம்மைத் தயாரித்துக்கொள்வது போன்ற வினாக்கள் எளிமையாக இந்நூலில் விளக்கப்படுகின்றன. நூற்றாண்டுகால நவீனத் தமிழிலக்கியத்தின் சுருக்கமான வரலாறு அளிக்கப்பட்டுள்ளது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இலக்கியஇயக்கங்கள் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. இன்றியமையாத இலக்கியக் கலைச்சொற்களுக்குப் பொருள் அளிக்கப்பட்டுள்ளது. முக்கியப் படைப்பாளியும் இலக்கிய விமர்சகருமான ஜெயமோகன் அவரது தெரிவில் நவீன இலக்கியத்தின் சிறுகதை, நாவல், கவிதை ஆகியவற்றிலும் வணிக எழுத்திலும் உள்ள குறிப்பிடத்தக்க நூல்களின் பட்டியல் ஒன்றை அளித்துள்ளார். மேலும் இந்நூலில் இலக்கியஆக்கம். இலக்கிய வாசிப்பு என்ற இரு தளங்களையும் ஆசிரியர் மிக எளிமையாக விளக்குவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

8) தனிக்குரல்

இந்தியா ரூ. 110.00

வெளிநாடு ரூ. 245.00

ISBN Number             : 978-81-89912-79-6

பக்கம்  192

 

ஒரு எழுத்தாளனின் பணி அனுபவங்களை தொகுப்பது மட்டுமல்ல. கருத்தாக்கங்களை உருவாக்குவதன் மூலமும் உரையாடலுக்கான கேள்விகளை தொடர்ந்து எழுப்புவதன் மூலமும் அவன் தனது சூழலை உயிர்ப்புடன் இயங்கச் செய்கிறான். அவன் தற்செயலாக, போகிற போக்கில் எழுப்புகிற கேள்விகள் மீண்டும் மீண்டும் பலராலும் பதில் சொல்லப்பட்டு நிரந்தரம் பெற்று விடுகின்றன. அந்த வகையில் ஜெயமோகன் தனது பேச்சுகளின் ஊடாக முன்வைத்த பல கருத்துகள் கடந்த இருபதாண்டுகளில் நவீன தமிழ் இலக்கிய சூழலின் தொடர்ச்சியான பேசுபொருளாக இருந்திருக்கின்றன. கடும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் உருவாக்கி இருக்கின்றன. சில சமயம் அவை தர்க்கத்தின் பாற்பட்டவை. சில சமயம் காழ்ப்பின் வழி நிற்பவை. இந்தத் தொகுதியில் ஜெயமோகன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகள் இடம்பெறுகின்றன. அவை பல்வேறு கலை இலக்கிய, சமூக பிரச்சினைகளை தீவிரமாக விவாதிக்கின்றன.

 

9) நிகழ்தல்-அனுபவக் குறிப்புகள்

இந்தியா ரூ. 150.00

வெளிநாடு ரூ. 285.00

ISBN Number             : 978-81-89912-76-5

பக்கம் 248

 

அனுபவங்களின் நிறங்கள் பிரியும் மகத்தான காட்சிகளை தொடர்ந்து உருவாக்குவதன் வாயிலாக ஒரு எழுத்தாளன் வாழ்வை விவரணை செய்ய முற்படுவதில்லை. மாறாக அறிய முடியாதெனெ விதிக்கபட்ட அதன் ரகசிய தருணங்களை நெருங்கிச் செல்ல இடையறாது விழைகிறான். அவ்வாறு நெருங்கிச் செல்லும்போது அந்த ரகசியம் இன்னும் பன்மடங்காக பல்கிப் பெருகிவிடுகிறதேயன்றி அவிழ்க்கப்படுவது இல்லை. அந்த வகையில் ரகசியங்களின், வாழ்வின் நுண்ணிய தருணங்களின் உற்பத்தியாளனாக ஒரு படைப்பாளி மாறிவிடுகிறான். ஜெயமோகனின் இந்த அனுபவக் கட்டுரைகள் ஆழ்ந்த விம்முதலை உருவாக்குபவை. நாம் புரிந்துகொள்ளாமல் கடந்துவந்துவிட்ட நமது நிழல்களை பேச வைப்பவை. மனிதர்களுக்குள் இடையறாது பெருகும் உணர்ச்சிகளின் நதியிருந்து ஒரு பொதுமையை கண்டடைபவை.

 

 

10) கண்ணீரைப் பின் தொடர்தல்

இந்தியா ரூ. 125.00

வெளிநாடு ரூ. 260.00

ISBN Number             : 81-86641-99-5

பக்கம் 216

 

சென்ற அரைநூற்றாண்டாகத் தமிழில் இந்திய இலக்கியங்கள் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு அவற்றுக்கு மதிப்புரைகள் கூட வருவதில்லை. இந்நூலில் ஜெயமோகன் அவரது மனம் கவர்ந்த இருபத்திரண்டு நாவல்களை நுட்பமாகவும் விரிவாகவும் ஆராய்கிறார். வங்க நாவல்களான ஆரோக்கிய நிகேதனம் (தாராசங்கர் பானர்ஜி), பதேர்பாஞ்சாலி (விபூதிபூஷண் பந்த்யோபாத்யாயா), நீலகண்ட பறவையைத்தேடி (அதீன் பந்த்யோபாத்யாய), கன்னட நாவல்களான மண்ணும் மனிதரும் (சிவராம காரந்த்), ஒரு குடும்பம் சிதைகிறது (எஸ்.எல்.பைரப்பா), உருது நாவலான அக்னி நதி (குர் அதுல் ஐன் ஹைதர்), குஜராத்தி நாவலான வாழ்க்கை ஒரு நாடகம் (பன்னாலால் பட்டேல்) போன்றவற்றை உலகப் பேரிலக்கியங்கள் எதற்கும் நிகரானவை என ஒரு நல்ல வாசகன் சொல்வான்.இந்நூல்கள் பற்றிய ஆய்வுகள் வாசித்தவர்களுக்கு அவற்றின் நுட்பங்களைக் காட்டும், வாசிக்காதவர்களுக்கு அந்நூல்களின் சிறப்பை உணர்த்தும், நாவல்களை வாசிப்பது போன்றே உத்வேகத்துடன் வாசிக்கவைக்கும் மொழிநடை கொண்ட நூல் இது.

 

 

 

முந்தைய கட்டுரைபுல்வெளிதேசம் 14,துறைமுகம்
அடுத்த கட்டுரைராஜமார்த்தாண்டன்