அமெரிக்கா திட்டம்..

அமெரிக்க பயண நிரல் மெல்ல மெல்ல ஒரு வடிவத்துக்கு வந்துகொன்டிருக்கிறது. இது கடைசியாக உருவாக்கிய திட்ட்டம். இப்போதைக்கு பல விஷயங்கள் முடிவுசெய்யும் நிலையில்தான் உள்ளன. பல நண்பர்கள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் எனக்கு என்னை வெளியே கூட்டிச்செல்லும் நண்பர்கள்தான் குறைவாக இருப்பார்கள் என நினைக்கிறேன். நண்பர்கள் விடுப்பு போடவேண்டியிருக்கும். ஆகவே அதற்கு தயாராக உள்ளவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

 

லை 11 – சென்னையில் இருந்து கிளம்புதல் லண்டன் வழியாக பாஸ்டன் பயணம்
ஜூலை 11 மாலை 6.30 பாஸ்டன் ஏர்ப்போர்டை அடைதல்
ஜூலை 12 முதல் 15 வரை பாஸ்டன்
ஜூலை 16-19 வரை நியூயார்க் மாநிலம் மற்றும் நயகரா பயணம்
ஜூலை 20-23 வரை நியூயார்க்/மன்ஹாட்டன் நகரம்
ஜூலை 24-26 வாஷிங்டன் டி சி சுற்றுப் பயணம்
ஜூலை 27 பாஸ்டனில் இருந்து ஃப்ளோரிடா மாகாணம் மியாமி நகரம் பயணம்

பாஸ்டனிலும், நியூயார்க் பகுதியிலும் நடக்க விருக்கும் வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியின் நேரமும், தேதியும், இடமும் பின்னர் அறிவிக்கப் படும்

ஜூலை 27 – ஆகஸ்ட் 3 வரை ஃப்ளோரிடா மாகாண சுற்றுப் பிரயாணம்

ஃப்ளோரிடாவில் வாசக சந்திப்பு/பொது நிகழ்ச்சி குறித்த தேதி, நேரம், இடம் பின்னர் அறிவிக்கப் படும்

ஆகஸ்ட் 4 மாலை 5.30 மியாமியில் இருந்து கிளம்பி மாலை 5.30 மணிக்கு சான்ஃபிரான்ஸிஸ்கோ அடைதல்
ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 6 வரை கலிஃபோர்னியா, நெவடா, அரிசோனா, ஓரிகான் மாநிலங்களுக்கு பயணித்தல்.

கலிஃபோர்னியா பே ஏரியா பகுதியில் வாசகர் சந்திப்பு மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் குறித்த இடம், தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப் படும்

மேலதிக விபரங்களுக்கு [email protected] என்ற முகவரியில் ராஜனைத் தொடர்பு கொள்ளவும்

முந்தைய கட்டுரைபுண்ணியபூமியிலிருந்து ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம் 14,துறைமுகம்