விளம்பரங்கள்

அன்பு ஜெயமோகன் சார்,
விளம்பரங்களை பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன? அதிகபட்ச வணிக குறிக்கீடுகள் உள்ள ஒரு காட்சிகலை அது. அதன் அழகியல் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? விளம்பரங்கள் சார்ந்த உங்கள் அனுபவங்கள் மற்றும் சமூகத்தில் அது செலுத்தும் அழுத்தம் குறித்த உங்கள் கருத்துக்களை அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன். உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் ( உதாரணம்:ஷாஜி ) மற்றும் வாசகர்கள் விளம்பரத்துறையில் உண்டு என்பதை நான் அறிவேன்.
அன்புடன் சந்தோஷ்
 
அன்புள்ள ஜெயமோகன் சார்,

காந்தியம் சார்ந்த தீவிரமான(?) கட்டுரைகளுக்கும் கடிதங்களுக்கும் இடையில் ஒரு சின்ன விளம்பர இடைவேளை போல  விளம்பரங்கள் பற்றிய உங்கள் பார்வை மற்றும் அனுபவங்கள் பகிர்ந்து கொண்டால் படிக்க ஆவல். விளம்பரத்தை ஒரு கலை வடிவமாக நீங்கள் ஏற்றுக்கொள்ள வில்லையா?

அன்புடன்
சந்தோஷ்

 

நண்பரே

 
விளமபரங்களில் செக்ஸ் பற்றிய ஒரு குறிப்பு. நேரம் இருக்கும் போது படிக்கவும்.
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
 

அன்புடன்
சந்தோஷ்

 

அன்புள்ள ஜெ.
 
திருவள்ளுவர் பற்றிய கருத்துகளை இன்று விஜய் தொலைகாட்சியில் பார்த்தேன். நன்று.
 
விளம்பரம் பற்றிய கட்டுரை அருமை.
 
ஆனால் விளம்பரங்கள் நுகர்வோரை சென்றடைய..  கீழ்கண்ட 6 கோட்பாடுகளால் மட்டுமே நுகர்வோர்கள் தீர்மானிக்கிறார்கள். அவர்க்ளை Motivate செய்யவே விளம்பரங்கள்.
 
அதில் ஏதாவது ஒன்றில் இதை வகைப்படுத்தி விட்டால் விளம்பரம் வெற்றியடையும். வியாபாரமும் பெருகும்.
 
 
INHERRENT MOTIVE  — தானே அறிந்து கொளவது. விளம்பரம் மூலம் அதை உறுதி செய்வது. { தொலைகாட்சி / வீட்டு உபயோக பொருட்கள் வாங்குதல்}
 
 
LEARND MOTIVE — விளம் பரம் மூலம் தெரிந்து கொண்டு பிறகு அலசி ஆராய்வது.
 
 
PASSIVE MOTIVE —  ஒரு பொருளை பற்றி தெரிந்தும் அக்கறையில்லாமல் இருந்தால் விளம்பரம் மூலம் உத்வேகப்படுத்தினால் நுகர்வோரை வாங்க செய்து  வெற்றி பெறலாம்.
 
 
PATRONAGE MOTIVE — சேவைகளையும் பயன் பெற்றவரின் பேட்டியை ஒளிபரப்புவது அல்லது விளம்பரம் செய்வது.
 
EMOTIONAL MOTIVE — உற்சாகப்படுத்த பிரபலங்களை வைத்து விளம்பரம். { குளிர்பானம் – சச்சின் }
 
 
RATIONAL MOTIVE. — சிறிது அழுத்தி சொல்வது.. ஒரு வகை விளம்பரமே..
 
 
விளம்பரங்களில் பலவகை – பிரசித்தி பெற்றது Questionare Advertisements
 
{ I use Hamam   Soap … Do you ..?? என்று ரஜினி/ கமல்  கேட்பதாக தொலைகாட்சியில் ஒரு விளம்பரம் வந்தால் … அந்த சோப்பின் விற்பனை எப்படியிருக்கும் ….???
 
 
 
 
இதை பற்றியும்  எழுதுங்களேன்.
 
நன்றி
 
சூர்யா
சென்னை
 
முந்தைய கட்டுரைமனமெனும் நோய்..
அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம் 12,வேட்டையும் இரையும்