பிரஜாபதி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

அதிகமான அன்போடும் வணக்கங்களோடும் எழுதுகின்றேன்.

தங்கள் படைப்புகளை (சில சிறுகதைகள் மற்றும் அறிவியல் புனைவுகள் நீங்கலாக) அதிகம் வாசித்ததில்லை. ஆயினும் இரண்டாயிரத்து ஒன்பது முதலே உங்கள் வலைப்பக்கத்தை தினமும் படிப்பவன் நான். குறிப்பாக காந்தி பற்றிய தங்கள் பதிவுகள் என் முன்முடிவுகளை சுக்குநூறாக நொறுக்கி போட்டு புதியதொரு கோணத்தை எனக்கு அளித்தவை.

சரி விஷயத்திற்கு வருகின்றேன். சாது செல்லப்பா என்ற ஒரு மத பற்றாளர் இந்து மத வேதங்கள் பிரஜாபதி என்ற ஒரு மீட்பர் தோன்றுவாறேன்றும் அவர் மனிதகுல விடுதலைக்காக பலியாவார் என்றும் சொல்லுவாதாக பிரசங்கித்து வருகின்றார். அப்படிப்பட்ட பிரஜாபதி எசுவேயல்லாமல் வேறொருவரும் இல்லை என்றும் பிரசங்கித்து வருகின்றார். தாங்கள் கீழ்காணும் காணோளியையும் பின்னூட்டத்தையும் பரிசீலித்து உங்கள் கருத்தை சொன்னால் மகிழ்வேன். எனது பல குழப்பங்களை உங்கள் பதிவுகள் தீர்த்து வைத்திருக்கின்றன.

refer to Vedas-one of the oldest,sacred texts givento genuine truthseekers.Rig Veda 9:113.7_11;Rig Veda4.5.5; 7.104.3 say’the only purpose ofthe PurushPrajapati isto sacrifice His life-blood to pay our penalty for sin. it’s the only way to Heaven and the only way of escape from eternal Hell’.could read vedas to know moreabout who PurushPrajapathi(means-Lord of people-in sanskrit)could be.The ancient sages, BC,did await Him -the 1 st born of all creation to come to save humans by His sacrifice

நான் எந்த மத நம்பிக்கையும் கொண்டவனில்லை. தனிப்பட்ட முறையில் கௌதம புத்தரும் கீதை சொன்ன கிருஷ்ணரும் என்னை கவர்ந்தவர்கள்.

நான் பிழைப்புக்காக ஆங்கில மொழியையே தின வாழ்வில் அதிகம் பயன்படுத்தி வருபவன். எனவே எனது கடிதத்தில் பல பிழைகள் காணப்படலாம். தயவுசெய்து மன்னிக்கவும்.

நன்றி
ஸ்ரீனிவாசன்.

முந்தைய கட்டுரைஒரு பழைய கடிதம்
அடுத்த கட்டுரைஎன் பெயர் சிவப்பு