தெலுகுமண்ணிலிருந்து..

வணக்கம்,

கட‌ந்த இரன்டு வருடஙகலாக நான் உஙகளை ஆர்வமுடன் வாசித்து வருகிறேன். இந்த இரன்டு வருட காலத்தில் உங்களை போல என்னை பாதித்தவர்கள் யாரும் இல்லை. என்னுடய பதின் பருவத்தில் தெலுங்கு வணிக எழுத்தாளர் என்டமூரி மேல் பைத்தியமாக அலைந்தேன். நல்ல வேலை அதோடு நின்றுவிடவில்லை!

இன்று வாசிப்பை சார்ந்து மிகச்சரியான இட்த்திற்கு வந்து சேர்ந்திருப்பதாக எண்ணிக்கொள்கிறேன். இதுவே ரொம்ப தாமதம்! இலக்கியம், வரலாறு, ஆண்மீகம், காந்தி, மாணுடவியல், பிற எழுத்தாழ்ர்களின் படைப்புகள்.. இவற்றுக்கு மட்டும் அல்ல, என் வாழ்க்கைக்கும் உஙகள் கருத்துக்கள் தான் இன்று வழிகாட்டுதழ்கள்.

நான் பிறந்தது, வளர்ந்தது சென்னையில். ஆந்திரத்தில் இருந்து 50 வருடங்கள் முன் இங்கு குடிபெயர்ந்த குடும்பம். படித்தது தெலுஙகில் தான். தற்ப்போது ஐதரபாத்தில் வாசம். ‘ஈநாடு’ தெலுஙுகு பத்த்ரிக்கையின் துனை ஆசிரியராக.

ஆனந்த விகடனில் ‘சங்க சித்திரஙகள் தான் நான் முதலில் படித்தது. தமிழில் படிக்க மெதுவாக கறறுக்கொண்டிருக்கும் காலம் அது. வார இதழ்கள் எனக்கு உதவின. எல்லா இதழ்களையும் முழுமையாக வாசிப்பது அப்போது என் வழக்கம். அப்படிதான் உஙகளை படிக்க நேர்ந்தது. இது என்று தெரியாது. ஆனால் சஙக‌சித்திரஙகள் எனக்கு பிடித்திருந்தது. ஒவ்வொரு சஙக கவிதைக்கு முன்னும் நீஙகள் சொல்லும் வாழ்க்கை அனுபவத்துடன் என்னால் லயிக்க முடிந்தது. காமத்தை பற்றிய.. நீஙகள் மென்மயான தமிழில் கொடுத்த சஙக கவிதைகளை மிகவும் ரசித்தேன்(வயசப்படி!). அவ்வளவுதான்.

அதற்க்கு அடுத்து.. விகடன், குமுதம் கொடுக்கும் எழுத்தாளர்களை மட்டும் தான் வாசித்தேன். சுஜாதா நாவல்கள், எஸ்.ராமகிருஷ்ண்ன் பத்திகளை விரும்பி படிக்க ஆரம்பித்தேன். மெதுவாக எஸ்.ரா புத்தகஙகள் கூட வாசிக்க ஆர்வம் வளர்த்து கொன்டேன். தமிழில் இந்த வாசிப்பு ஆர்வம்… சென்னையில் ஒரு தெலுஙகு பத்த்ரிக்கை நிருபராக எனக்கு மிகவும் உதவியது!

ஈநாடு.. ‍ஆந்திரத்தில் மிக பிரபலமான பத்திரிக்கை. அதில் நான் 2001ல் சேர்ந்தேன். 2005க்கு பிறகு ஐதராபாத், திருப்பதி, சிலகாலம் சென்னை, 2008லிருந்து மீண்டும் ஐதரபாத்துக்கு வந்து விட்டேன். தர்ப்போது அம்மா, அப்பா சென்னையில்.

2010 வரை தமிழில் என் வாசிப்பு மிக எழிமையானது(இப்போது சற்று பரவாயில்லை. அதற்க்கு நீஙகள் தான் காரனம்). எஸ்.ரா வின் இனைய தளத்தை தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டு இருந்தேன். ஒரு நாள்.. இனையத்தில் ஏதோ ஒரு இசை பத்தியை பார்த்துக்கொண்டு இருக்கையில் உங்களின் தளத்துக்கு வந்தேன். தமிழின் சிற்ந்த நாவல்கள்‍ பட்டியல் பார்த்து.. விட்டுவிட்டேன். பிறகு, மற்றோரு சுட்டியின் வழியாக சேலம் பகடால நரசிம்மலு நாயுடு பற்றிய பதிவை பார்த்தேன்.

(உஙகள் பதிவில் நாயுடு தன் பலிஜவாரி புராணம் தெலுங்கில் எழுதி இருப்பத்தாக குறிப்பிட்டீர்கள். அந்த புத்தகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? அவரின் மற்ற புத்தகங்கள் எங்கே கிடைக்கலாம்? கோவையில் ‘இந்து பைபில்’ பதிப்பிக்கும் நிறுவனத்துக்கு தொடர்பு கொன்டு பேசினேன். இல்லை என்றார்கள்)

எனக்கு வரலாறு‍, மானுடவியல் மீது பற்று அதிகம். இன்று நாம், நமது பேச்சு, பழக்க வழக்கங்கள்.. எல்லா வற்றிர்க்கும் ஏதோ ஒரு வகையில் ‘ஆதி’ தொடர்பு இருக்கலாமென நினைக்கிறேன். தமிழ் நாட்டு தெலுஙகு மக்க்ளின் வாழ்வு பற்றியும் நிறைய தெரிந்து கொள்ள ஆசை. இதே காரனத்தினால் தான் இதற்க்கு முன்பே கி.ரா. வின் கோபல்ல கிராமம், மக்க்ள் படித்தேன்.

மற்றொரு நாள். சென்னையில் இருக்கும் நன்பன், ‘அம்பேத்கர் பற்றி ஜெயமோகன் அசிஙக‌மா எழுதி இருக்காரு ப்பாரு..’ என்றான். பார்த்தேன். காந்தி பற்றி நான் படித்த உங்கள் முதல் பதிவு அதுதான். நீங்கள் செல்லும் ஆழஙகள், மனசாட்சியை மையமாக வைத்து வரலாற்றை நோக்கும் விதம் அற்புதமாக பட்டது. என் நன்பர் மிகவும் மேம்போக்காக படித்தது தெரிந்தது.

சங்க சித்திரங்கள் எழுதியவரா? என்று அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது. அடுத்தடுத்து, பல பதிவுகளை படித்தேன். இன்றும் படித்துகொன்டு தான் இருக்கிறேன்.

நம் மக்கள் ஏன் ஒருவரை ஒருவர் ‘சாப்டீஙகளா?’ என்று கேட்பார்கள்? – பதிவை பார்த்த போது ‘இந்த மாதிரி ஆளத்தான்யா தேடிக்கிட்டு இருந்தோம்!’ என்று பட்டது.

அடுத்து சென்னை வந்து பன்படுதல், சிலுவையின் பெயரால் வாங்கினேன். இந்திய ஞானம், விசும்பு நூல்களின் மூலம் உங்களை பற்றி புரிதல் விரிவாக்கி கொண்டேன்.

விஷ்னுபுரம்! இந்த நாவலை ஒரு சவாலாகவே படித்தேன். ‘படிபபதற்க்கு ரொம்ப கஷ்டமான நாவல். புரியாது’ என்ற பயம் தான் காரணம். ஆனால், முதல் பக்கத்திலிருந்தே நாவலில் ஒன்றிப்போய் விட்டேன். இரண்டாம் பாகத்தில் வரும் விவாதஙகள் மட்டும் மீன்டும் மீன்டும் படிக்க வேன்டியதாயிற்று. கவிதைகள் எவ்வள்வு முயற்சித்தும்… லேசாகவே புரிந்துகொள்ள் முடிந்தது.

நாவலை முடித்த பிறகு தான்.. தள‌த்தில் உள்ள விவாதஙகள், கடிதஙகள் பார்த்தேன். ஒரு வாசகனாக் இன்னும் நான் விஷ்னுபுரம் தரும் தரிசனம் முழுமையாக பார்க்கவில்லை என்று தான் நினைக்கிறேன். எல்லா க்ளாசிக்கும் இப்படித்தான் போல!

‘பின் தொடரும் நினைவின் குரல்’ நாவல் என்னை எனக்கு புரிய வைத்தது! புகாரின், குழந்தைகள் கடவுளிடம் செல்லும் காட்சி… என்னை விம்மி அழவைத்த்து சார்!

இப்போது.. இன்றைய காந்தி படித்துக்கொன்டு இருக்கிறேன். என் மனைவி 9 வது படித்தவ‌ள். என் பிறந்த நாளுக்கு அவ்ள் பரிசாக கொடுத்த புத்தகம் இது!

நான் தமிழில் எழுதும் முதல் (நீ..ன்ட) கடிதம் இதுதான். உங்கள் நேரம் எடுதுக்கொன்டதர்க்கு மன்னிக்கவும். இனிமேல் தொடர்ந்து உங்களுக்கு கடிதம் எழுதுகுறேன். தெலுங்கு இலக்கியம் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது.

நீஙகள் சென்னை வந்தால் சந்திக்க ஆசை. தயவு செய்து தெரியப்ப்டுத்தவும். இந்த வருடம் நாகர்கோயில் வரலாம் என்று நினைக்கிறேன். அனுமதியுங்கள்!

அன்புடன்,

ஜெ.ராஜூ

அன்புள்ள ராஜூ

உங்கள் கடிதம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஒரு புதிய வாச்கார் என்பது மட்டும் அல்ல, சமீபகாலமாக ஆந்திர வரலாறு பண்பாடு மீது ஓர் ஆர்வம் உருவாகி வருகிறது. அதற்கு தமிழினி வசந்தகுமார் ஒரு காரணம் என்றால் நான் பயணம்செய்த கோதாவரி நிலப்பகுதி இன்னொரு காரணம். கோதாவரிப்படுகை போல என் மனதில் பெரும் காதலை உருவாக்கக்கூடிய இன்னொரு நிலம் இந்தியாவில் இப்போது இல்லை.

தெலுங்கு இலக்கியம் பற்றி மொழியாக்கங்கள் மூலம் நான் அறிந்துகொண்டது மிகமிக குறைவே. மொழியாக்கம்செய்யப்பட்ட நூல்களெல்லாமே முற்றிலும் சாதாரணமானவை. நவீன தெலுங்கு இலக்கியம் பற்றி ஒருவேளை நாம் உரையாட முடியும்

கண்டிப்பாக சந்திப்போம் .

ஜெ

முந்தைய கட்டுரைஒரு குழந்தைப் பாடல்
அடுத்த கட்டுரைஆட்டிசம், இசை