ஊட்டி – சுழன்றும் கதைப் பின்னது அண்டம்

உதகை நித்யா ஆய்வரங்கத்தில் பங்கேற்றது குறித்த பதிவு – ஒத்திசைவு ராமசாமி

ஒத்திசைவு ராமசாமி

’’ஹ்ம்ம்… இருபதாண்டுகளுக்குப் பின் நான் செல்லவிருந்த ஒரு ‘இலக்கியக்’ கூட்டமிது. இருப்பினும் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ‘அந்தக்கால இலக்கியக்கூட்ட நினைவுகளினால்’ ஒரு அடிவயிற்றில் கலவரநிலையுடன் தான் அங்குபோனேன்.

அங்கு எனக்கு இரண்டு முக்கியமான ஆச்சரியங்கள்: ஒன்று, கூடியவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாக இருந்தது; இரண்டு, சில பெண்களும் வந்திருந்தது.

… எப்படி ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் (அதுவும் நமது பெரும்பாலும் குமட்டுதலுக்குரிய ’கூட்டக்கலாச்சாரப்’ பின்னணியில்) – உரையாடல்களை மறுபடியும், மறுபடியும் குறிக்கோள்களை நோக்கிக் குவியச் செய்வதன் முக்கியம், எப்படி கருத்துத் தெரிவிக்க விழைபவர்களை அனுமதிப்பது, கருத்துக்களை வெளிப்படுத்த கூச்சப் படுபவர்களை ஊக்கப் படுத்துவது, தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்துவது, எப்படி அனைத்து அமர்வுகளிலும் அனைவரையும் பங்கேற்க வைப்பது, எப்படித தேவையில்லாத கவைக்குதவாத விஷயங்களைத் தவிர்ப்பது, முடிந்தவரை நேரம் தவறாமை – எனப் பல விதங்களில், தளங்களில் பார்த்தாலும், இந்த அமர்வுகள் மிகவும் மெச்சத்தக்க விதத்திலேயே அமைந்தன.’’

சுழன்றும் கதைப் பின்னது அண்டம்…

 ஊட்டி நிகழ்ச்சி புகைப்படங்கள் 

முந்தைய கட்டுரைகுழந்தைமேதைகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபி.ஏ.கிருஷ்ணன் – ஒரு வானொலி நேர்காணல்