தமிழ்நாட்டின் முக்கியமான ஓவியர்களில் ஒருவரான ஏ.பி.சந்தானராஜ் அவர்கள் இன்று சென்னையில் காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் 9, இரண்டாவது குறுக்குத்தெரு,MC நகர் ,சிட்லப்பாக்கம்சென்னை விலாசத்தில் நடைபெறும்.
1932ல் தமிழ்நாட்டில் திருவண்ணமலையில் சந்தானராஜ் பிறந்தார். சென்னை கவின்கலைக் கல்லூரியின் பட்டதாரி அவர்.1958ல் அங்கேயே ஆசிரியராகச் சேர்ந்தார். 1985 முதல் 1990 வரை அங்கேயெ முதல்வராகப் பணியாற்றினார்.
சந்தானராஜ் சென்னை ஓவியக்கல்லூரியின் மூத்த ஓவியர்கலில் ஒருவர். அவரது மாணவர்கள் பலர் பின்னர் சாதனையாளர்களாக அறியபப்ட்டார்கள். கெ.ஆதிமூலம், ஆர்.பி.பாஸ்கரன், சி.டக்ளஸ், ஆர்.எம்.பழனியப்பன் போன்றவர்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களின் வளர்ச்சியில் சந்தானராஜுக்கு பெரும் பங்குண்டு
http://thenoblesage.wordpress.com/artists/ap-santhanaraj/
http://www.ashvita.com/Fine%20Art/Artists/APSanthanaraj/Pages/3.htm