பெரியார் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் பதிலுக்கு நன்றி.
நானும் ஆனந்தவிகடன் மூலமாகவே உங்களை முதலில் வாசித்தேன்.(சங்க சித்திரங்கள்). உங்களின் புனைவு எழுத்துக்களை நான் அதிகம் படித்ததில்லை, ஆனால் கட்டுரைகள் அதிகமும் வாசித்திருக்கிறேன்.
பெரியார் பற்றிய உங்கள் பதிவுகள் அவரை ஆளுமையை கணிக்கத் தவறியவை என்பது என் கருத்து.  என் எளிய அறிவில் தமிழ் சமுகத்தின் ஆகப்பெரும் ஆளுமைகளில் பெரியார்  முதன்மையானவர். தலித்துகளின் தற்போதைய வளர்ச்சிக்கும், சுயமரியாதையான வாழ்வுக்கும் ஆன காரணகர்த்தக்களில்  அவரும் ஒருவர். நானறிந்து தமிழ் எழுத்தாளர்களில் நுண்ணுணர்வு அதிகம் மிக்கவர் நீங்கள். உங்களின் பெரியார் பற்றிய பார்வைக் கோணமும் மாறும் என்றே நம்புகிறேன்.
தவிரவும் ஆனந்த விகடனின் விசமத்தனமான அவதூறை வன்மையாக கண்டிக்கிறேன்.

மிக்க ப்ரியமுடன்

 சரவணன்


அன்புள்ள சரவணன் . உங்கள் கருத்தை அறிந்துகொண்டேன். நான் என் கருத்துகக்ளில் எப்போதுமே பிடிவாதம் உள்ளவனல்ல. எப்போதுமே விவாதத்துக்கு தயாராக இருப்பவன். என் எண்ணங்களில் என் நண்பர்களுடனான விவாதங்கள் ஏன் எதிரிகளுடனான விவாதங்கள் பெரும் மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றன. குறிப்பாக சோதிப்பிரகாசம். குமரிமைந்தன். பொ.வேல்சாமி .அவர்கள் மார்க்ஸியர்கள், தமிழியக்க வாதிகள். குமரிமைந்தன் பெரியாரியருகூட

ஆகவே விவாதிப்போம்.

அன்புடன்

ஜெ

முந்தைய கட்டுரைகேரளமும் சுதந்திரமும் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅய்யா பெரியார் -கை.அறிவழகன்