அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். யானைப்பலி கட்டுரையைப் படித்த மனக்கலக்கமே இன்னமும் தீரவில்லை. அசாம் காடுகளிலுள்ள தண்டவாளப்பாதைகளில் அடிபட்டு இறக்கும் யானைகள் ஒருபக்கம், தங்களின் வாழ்விடத்திற்குள் யானை புகுந்துவிட்டதென அதைத் தாக்கும் மக்கள் மறுபக்கம். உண்மையிலேயே யானைகளுக்கு மிகவும் சிக்கல்தான். இதோ இந்தச் சுட்டியைப் பாருங்கள். யானைகள் உணவிற்காகவும் கொல்லப்படுகின்றன. மனிதனின் அடாவடித்தனத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது.
தங்களது நேரத்திற்கு மிக்க நன்றி.
பாலா
http://www.occupyforanimals.org/elephant-meat.html
அன்புள்ள பாலா,
கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆப்ரிக்கப் பின்னணி கொண்ட கதை ஒன்றில் அ.முத்துலிங்கம் யானையைக் கொன்று ஒருவாரம் தின்றுகொண்டே இருக்கும் மக்களைப்பற்றி எழுதியிருக்கிறார்.
ஜெ